பிக் பாஸ் 6ம் சீசன் வீட்டில் ராபர்ட் மாஸ்டர் ரச்சிதாவின் கவனம் ஈர்ப்பதற்காக பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார். அதுவும் அவர் மீது கிரஷ் இருக்கிறது என சொல்லி அவர் தொடர்ந்து அவரிடம் பேசி வருகிறார். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க ரச்சிதா தொடர்ந்த முயற்சித்தாலும் அவர் கேட்பதாக இல்லை.
இந்நிலையில் இந்த வாரம் ராஜா குடும்பம் டாஸ்கில் ரச்சிதா ராணியாகவும், ராபர்ட் ராஜாவாகவும் கெட்டப் போட்டிருந்தனர். இந்த டாஸ்கில் ரச்சிதா அஸீம் உடன் சேர்ந்து திருட வேண்டும் என ஒரு சீக்ரெட் டாஸ்க் கொடுக்கப்பட்டது, அதை அவர்களும் செய்து முடித்தனர். அவர்கள் திட்டம்போட்டு திருடும் வீடியோவை பிக் பாஸ் எல்லோருக்கும் டிவியில் போட்டு காட்டினார்.
அதை பார்த்து ஷாக் ஆன ராபர்ட் மாஸ்டர் கதறி கதறி அழுதார். ரச்சிதா தன்னை ஏமாற்றிவிட்டதாக கூறி அவர் அழுத நிலையில் மற்றவர்கள் அவரை சமாதானப்படுத்தினார்கள். அவரிடம் ரச்சிதா சென்று பேசிய நிலையில், அதற்குப்பிறகு அவரும் பாத்ரூமில் கதறி கதறி அழுதார். நம்பிக்கை துரோகம், முதுகில் குத்திவிட்டேன் என ராபர்ட் சொல்லும் வார்த்தைகள் ஏற்றுக்கொள்ளவே முடியாதது என சொல்லி அவர் கதறி அழுதிருக்கிறார்.