90களில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் நடித்து முன்னணி நாயகியாக வலம் வந்தவர். பிரபுதேவாவுடன் பட வேகமாக நடனம் ஆடக்கூடிய ஒரே நடிகை இவர்தான் என்ற பெருமையை பெற்றவர். தற்போது சினிமாவில் தனது மார்க்கெட் போனது என்பதை உணர்ந்த அவர் அப்படியே அரசியலில் ஈடுபட்டார்.
ஆந்திராவில் வெற்றி அமைச்சராக வலம் வரும் ரோஜா தனது தொகுதி மக்களுக்கு ஏராளமான நல்ல விஷயங்களை செய்து வருகிறார். அப்படி அவரை குறித்து ஒரு தகவல் வந்துள்ளது.கொரோனாவால் தாய், தந்தை இருவரையும் இழந்த ஒரு சிறுமியை தத்தெடுத்த ரோஜா படிப்பு செலவை ஏற்றுள்ளார். தற்போது அவர் நீட் தேர்வில் நல்ல மதிப்பெண் எடுத்து திருப்பதி பத்மாவதி மகளிர் கல்லூரியில் சேர்ந்து உள்ளார்.
முதலாமாண்டு மருத்துவ படிப்பு படித்துவரும் அவர் வருங்காலத்தில் இலவசமாக மருத்துவ சிகிச்சை செய்வதே தனது லட்சியம் என்று கூறியுள்ளார்.