ஆசி­ய­ கிண்ணக் கிரிக்கெட் தொடரை இந்­தி­யா­வி­லி­ருந்து ஐக்­கிய அரபு எமி­ரேட்­ஸுக்கு மாற்ற முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது. இலங்­கை, இந்­தி­யா, பாகிஸ்­தான், பங்­களா­தேஷ், ஆப்­கா­னிஸ்தான் உள்­ளிட்ட அணிகள் பங்­கேற்கும் ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடரை இவ்வருட இறு­தியில் இந்­தி­யாவில் நடத்த திட்­ட­மிடப்பட்­டி­ருந்­தது. ஆனால், இந்­தி­யா –பாகிஸ்தான் இடையே சுமு­க­மான உறவு இல்­லா­த­தால், நடத்­தப்­ப­டாமல் உள்­ளன. இதன் கார­ண­மா­க இந்­தி­யா­ வருவதற்கு பாகிஸ்­தான் மறுப்பு தெரி­வித்­தது.
இந்­நி­லையில் இத் தொடரை இலங்­கையில் நடத்த திட்­ட­மி­டப்­பட்­டது. இலங்கை கிரிக்கெட் நிறு­வனமும் இதற்கு சம்­மதம் தெரி­வித்­தி­ருந்­தது. இந்­நி­லையில் இது­தொ­டர்­பாக தீர்மானிக்கும் ஆசிய கிரிக்கெட் சபைக் கூட்டம் மலே­சி­யாவின் கோலா­லம்­பூரில் நடை­பெற்­றது. இதில் ஆசிய கிண்ணத் தொடரை இந்­தி­யா­வுக்கு பதி­லாக ஐக்­கிய அரபு எமி­ரேட்ஸில் நடத்­து­வது என ஏகமனதாக முடிவு செய்­யப்­பட்­டுள்­ளது. எனவே எதிர்­வரும் செப்­டெம்பர் மாதம் 13 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரை டுபாய் மற்றும் அபு­தா­பியில் இப்போட்­டிகள் நடத்­தப்­படவுள்­ளன. இதில் மத்­திய அரசின் அனு­மதி கிடைத்தால் மட்­டுமே பாகிஸ்­தா­னுடன் இந்­திய அணி மோதும் என்று இந்­திய கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளமை குறிப்­பி­டத்­தக்­கது.