பெண்ணொருவர் பிறக்கும் போதே மெய்மர் குரோரோ சிஸ்டிக் ஹைக்ரோமா எனப்படும் வித்தியாசமான நோயுடன் பிறந்துள்ளார். இதனால் அவரை அனைவரும் வெறுத்தனர். இப்போது வெறுக்கப்பட்ட அந்த யுவதி யூடியுப் என்ற சமூகவலைத்தளத்தில் மில்லியன் கணக்கானோரின் வரவேற்பை பெற்றுள்ளார்.
அமெரிக்காவைச் சேர்ந்த 21 வயதான யுவதியொருவர் மெய்மர் குரோரோ சிஸ்டிக் ஹைக்ரோமா எனப்படும் ஒருவகையான நோயுடன் காணப்படுவதால் பார்ப்பதற்கு மிகவும் அவலட்சணமாக இருப்பதால் சமூகத்தில் அனைவரும் குறித்த பெண்ணை ஒதுக்கி வைத்திருந்தார்கள்.
குறித்த பெண் அழகு சாதனப்பொருட்களை உபயோகித்து தனது முயற்சியால் மில்லியன் கணக்கானோர் தொடர்பு கொள்ளும் அளவுக்கு அழகு ராணியாக திகழ்கிறார்.
இந்நிலையில் அந்த யுவதி தானும் திருமணமாகி பிள்ளைகளுடன் வாழ ஆசையாகவுள்ளதாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.