ஆண் குழந்­தைகளுக்கு இன­வி­ருத்தி ஆற்றல் பாதிப்பு.. - Eelatheepam Sri Lankan Breaking NEWS

ஆண் குழந்­தைகளுக்கு இன­வி­ருத்தி ஆற்றல் பாதிப்பு..

வலி­நீக்கி மருந்­து­களை உள் எடுக்கும் கர்ப்­பிணிப் பெண்கள் தமது கரு­வி­லுள்ள ஆண் குழந்­தை­களின் இன­வி­ருத்தி ஆற்­ற­லுக்கு தீங்கு விளை­விப்­ப­தாக பிரித்­தா­னிய விஞ்­ஞா­னி­களின் பிந்­திய ஆய்வு எச்­ச­ரிக்­கி­றது. அதே­ச­மயம் இந்த வலி­நீக்கி மருந்­துகள் பெண் குழந்­தை­க­ளது இன விருத்தி ஆற்­ற­லையும் பாதிக்கக் கூடி­யவை என அவர்கள் தெரி­விக்­கின்­றனர்.  
இதற்கு இரு மாதங்­க­ளுக்கு முன்னர் இபு­ரோபென் மற்றும் பர­சிற்­றமோல் உள்­ள­டங்­க­லான வலி­நீக்கி மருந்­துகள் தொடர்பில் பிரான்ஸ் விஞ்­ஞா­னி­களால் நடத்தப்பட்ட ஆய்வில் அந்த மருந்துகள் கருப்பை கலங்களின் எண்ணிக்கையைக் குறைப்பது கண்டறியப்பட்டிருந்தது.  
ஆனால் தற்போது பிரித்தானிய விஞ்ஞானிகளால் நடத்தப்பட்டுள்ள புதிய ஆய்வில் அந்த மருந்துகள் ஆண் குழந்தைகளின் விந்தணு உற்பத்தியைப் பாதிப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.  
வலிநீக்கி மருந்துகள் கருவிலுள்ள குழந்தையின் மரபணுவில் மாற்றத்தை ஏற்படு த்தி பரம்பரை பரம்பரையாக அதனால் ஏற்படக் கூடிய பாதிப்புகளைக் கடத்தும் அபாயம் மிக்கவை என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.  
ஒரு வார காலம் பரசிற்றமோலைப் பயன் படுத்தினால் கர்ப்பிணிப் பெண்களின் முட்டை உற்பத்திக் கலங்கள் 40 சதவீதத்தால் குறைவடைவது கண்டறியப்பட்டுள்ள தாக பிரித்தானிய எடின்பேர்க் பிராந்திய விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.  

About Unknown