சின்னத்திரையின் நட்சத்திர தொகுப்பாளினி டி.டி. தொகுத்து வழங்கிய ஜோடி நம்பர் வன், சூப்பர் சிங்கர், காபி வித்டி, அன்புடன் டிடி, நிகழ்ச்சிகள் பெரிய அளவில் மக்களைப் கவர்ந்தன.
அவர் திருமணம் செய்தார், திடீரென விவாகரத்து செய்தார். சினிமாவில் நடிப்பதை தவிர்த்து வந்தவர் திடீரென நடிகை ஆனார். சின்னத்திரையை விட்டு விலகி சினிமாவில் முழு கவனத்தையும் செலுத்த தொடங்கினார்.
கவுதம் மேனன் இயக்கத்தில் துருவ நட்சத்திரம், ராஜீவ் மேனன் இயக்கத்தில் சர்வம் தாளமயம் படங்களில் நடித்து வருகிறார். தற்போது திடீரென மீண்டும் சின்னத்திரைக்கு வந்துள்ளார்.
எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் விஜய் ரிவியில் ஒளிபரப்பாக இருக்கும் என்கிட்ட மோதாதே நிகழ்ச்சியை தொகுத்து வழங்குகிறார். சின்னத்திரை நட்சத்திரங்கள் பல போட்டிகளில் மோதும் நிகழ்ச்சி இது.