பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையின்போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றா விட்டால் எதிர்வரும் வரவு -செலவுத் திட்டத்துக்கு எதிராக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வாக்களிக்குமென வன்னி மாவட்ட கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் நேற்று வீரகேசரி வாரவெளியீட்டுக்குத் தெரிவித்தார். ஜனாதிபதித் தேர்தல் மற்றும் பொதுத் தேர்தலின் போது வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இன்றளவில் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. இந்த நிலையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி முன்வைத்த நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்த்து வாக்களிப்பது தொடர்பில் பிரதமரைச் சந்தித்தபோது சில கோரிக்கைகளை முன்வைத்தோம். இதில் முக்கியமானது, வடக்கு, கிழக்கிலுள்ள இளைஞர், யுவதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்குவது. எமது கோரிக்கைகளை பிரதமர் ஏற்றுக்கொண்டுள்ளார்.
பிரதமர் இந்தக் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்துக்கு எதிராக தமிழ்த் தேசியத் கூட்டமைப்பு வாக்களிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.