வாகன விபத்தில் ஐவர் படுகாயம் இளைஞன் உயிரிழப்பு!!.. - Eelatheepam Sri Lankan Breaking NEWS

வாகன விபத்தில் ஐவர் படுகாயம் இளைஞன் உயிரிழப்பு!!..


மட்டக்களப்பு களுவாஞ்சிகுடியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் படுகாயமடைந்தனர்.
இந்த விபத்து இன்று இடம்பெற்றது எனப் பொலிஸார் தெரிவித்தனர்.
கல்முனை வீதியில் கோழி ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனமும் சிற்றூர்ந்தும்  ஒன்றுடன் ஒன்று மோதியுள்ளது.
அதேவேளை டிப்பர் ரக வாகனத்துடன் மோதிய சிற்றூர்ந்து மின்கம்பத்துடன் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டது எனக் கூறப்பட்டது.
இதில் சிற்றுந்துச் சாரதி உயிரிழந்துள்ளதுடன் டிப்பரில் பயணம் செய்த மூவரும் சிற்றுந்தில் பயணம் செய்த இருவரும் படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிகுடி ஆதார மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இது தொடர்பான மோலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டனர்.

About Unknown