புதிய அர­ச­மைப்பு ஊடாக தீர்வு கிடைக்காவிடில் கடும் நிலைப்­பாட்டை எடுக்­க­ வேண்­டி­யி­ருக்­கும் என எதிர்­கட்­சித் தலை­வ­ர் தெரிவிப்பு!!! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

புதிய அர­ச­மைப்பு ஊடாக தீர்வு கிடைக்காவிடில் கடும் நிலைப்­பாட்டை எடுக்­க­ வேண்­டி­யி­ருக்­கும் என எதிர்­கட்­சித் தலை­வ­ர் தெரிவிப்பு!!!

National Leader Mahindha’s support is important to the New Constitution: says Era Sampanthar in Parliament
புதிய அர­ச­மைப்பை உரு­வாக்­கும் நட­வ­டிக்­கை­கள் மீண்­டும் ஆரம்­பிக்­கப்­பட்டு விரை­வாக ஒரு தீர்வை எட்­ட­வேண்­டும் என்று எதிர்­கட்­சித் தலை­வ­ரும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தன், ஐரோப்­பிய ஒன்­றி­யக் குழு­வி­ன­ரி­டம் எடுத்­து­ரைத்­துள்­ளார்.
மேலும், இந்­தக் கரு­மங்­களை அரசு செய்­யத் தவ­றும் பட்­சத்­தில் எம் மத்­தி­யில் உள்ள தீவிர செயற்­பாட்­டா­ளர்­க­ளுக்கு அது ஒரு உந்து சக்­தி­யாக அமை­வ­தோடு நாமும் மிகக் கடு­மை­யான நிலைப்­பாட்­டினை எடுக்­க­வேண்­டிய நிலை­மைக்­குத் தள்­ளப்­ப­டு­வோம் என­வும் வலி­யு­றுத்­தி­னார்.
ஐரோப்­பிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் 6பேர், எதிர்­கட்­சித் தலை­வ­ரும், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரு­மான இரா.சம்­பந்­தனை, நாடா­ளு­மன்­றத்­தில் அமைந்­துள்ள எதிர்­கட்­சித் தலை­வ­ரின் அலு­வ­ல­கத்­தில் நேற்­றுச் சந்­தித்­துக் கலந்­து­ரை­யா­டி­னர்.
இந்­தச் சந்­திப்­புத் தொடர்­பில், கூட்­ட­மைப்பு ஊட­கப் பிரி­வி­னால் அனுப்பி வைக்­கப்­பட்­டுள்ள அறிக்­கை­யில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது,
மந்­த­மான செயற்­பாடு 
முன்­னைய அரசு ஜன­நா­ய­கப் பண்­பு­க­ளி­லி­ருந்து வில­கி­ய­தன் கார­ண­மாவே தற்­போ­தைய அரசு பத­விக்கு வந்­துள்­ளது. இந்த அர­சின் சிந்­த­னை­யும் நட­வ­டிக்­கை­க­ளும் முன்­னைய அர­சின் நட­வ­டிக்­கை­க­ளோடு ஒப்­பி­டு­கை­யில் சாத­க­மாக இருந்­தா­லும், கரு­மங்­கள் மிக மந்­த­க­தி­யி­லேயே இடம்­பெ­று­கின்­றன. இந்த அரசு இனங்­க­ளுக்­கி­டை­யில் புரிந்­து­ணர்வை ஏற்­ப­டுத்தி சமூ­கங்­க­ளுக்­கி­டை­யில் சுமூக நில­மை­யினை கொண்­டு­வ­ரு­வ­தற்கு இணக்­கப்­பாட்­டினை கொண்­டி­ருப்­ப­தா­க­வும் தெரி­வித்­தார்.
அர­ச­மைப்பு 
அதி­கா­ரப் பகிர்வு தொடர்­பில் விளக்­க­ம­ளித்த சம்­பந்­தன், குறிப்­பிட்ட பிர­தே­சங்­க­ளில் பல நூற்­றாண்­டு­க­ளாக வாழும் மக்­க­ளின் சுய­ம­ரி­யாதை, மதிப்பு மற்­றும் இறைமை என்­ப­வற்றை அடிப்­ப­டை­யா­கக் கொண்டு ஒரு­மித்த பிரி­ப­டாத, பிரிக்க முடி­யாத நாட்­டிற்­குள் ஒரு தீர்­வி­னையே நாம் வேண்டி நிற்­கி­றோம் என்­றும் இத­னைப் பூர்த்தி செய்­வ­தற்கு அர­ச­மைப்பை உரு­வாக்­கும் கரு­மங்­கள் மீண்­டும் ஆரம்­பிக்­கப்­பட்டு விரை­வான ஒரு தீர்­வினை எட்­ட­வேண்­டும் என்­றும் கூறி­னார்.
புதிய அர­ச­மைப்­பில் மக்­கள் தமது கரு­மங்­க­ளைத் தாமே முன்­னெ­டுக்­கக்­கூ­டிய வகை­யில், அதி­கா­ரங்­கள் பகி­ரப்­ப­டு­வ­தி­னை­யும், அத்­த­கைய அதி­கா­ரங்­கள் மத்­திய அர­சி­னால் மீளப்­பெ­ற­மு­டி­யாத வகை­யி­லும், மத்­திய அரசு அந்த அதி­கா­ரங்­க­ளில் தலை­யிட முடி­யாத வகை­யி­லு­மான ஒரு கட்­ட­மைப்­பையே எதிர்­பார்க்­கி­றோம் என்­றும் தெரி­வித்த இரா. சம்­பந்­தன், இந்த விட­யங்­கள் தொடர்­பில் நாங்­கள் மிக­வும் நியா­ய­மான வகை­யி­லேயே செயற்­ப­டு­கி­றோம் என்­றும் தெரி­வித்­தார்.
ஆனால் இந்­தக் கரு­மங்­களை அரசு செய்­யத் தவ­றும் பட்­சத்­தில் எம் மத்­தி­யில் உள்ள தீவிர செயற்­பாட்­டா­ளர்­க­ளுக்கு அது ஓர் உந்­து­சக்­தி­யாக அமை­வ­தோடு நாமும் மிகக் கடு­மை­யான ஒரு நிலைப்­பாட்­டினை எடுக்க வேண்­டிய நிலை­மைக்­குத் தள்­ளப்­ப­டு­வோம் என­வும் வலி­யு­றுத்­தி­னார்.
தமி­ழர் மீது வன்­முறை
உறுப்­பி­னர் ஒரு­வ­ரின் கேள்­விக்­குப் பதி­ல­ளித்த இரா.சம்­பந்­தன், தமிழ் மக்­கள் இந்த நாட்­டில் இரண்­டாந் தர­மக்­கள்­கு­ழு­வா­கப் பார்க்­கப்­ப­டு­வ­தன் நிமித்­தம் அவர்­கள் பாதிப்­புக்­குள்­ளாகி வேத­னை­ய­டைந்­த­வர்­க­ளாக மட்­டு­மல்­லாது, நிந்­திக்­கப்­பட்­ட­வர்­க­ளா­க­வும் ஒடுக்­கப்­பட்­ட­வர்­க­ளா­க­வும் காணப்­ப­டு­கின்­ற­னர் என்­றும் தெரி­வித்­தார். மேலும் அர­சி­யல் கோரிக்­கை­களை முன்­வைத்த ஒவ்­வொரு சந்­தர்ப்­பத்­தி­லும் தமிழ் மக்­கள் மீது வன்­முறை கட்­ட­விழ்த்­து­வி­டப்­பட்ட சந்­தர்ப்­பங்­க­ளை­யும் எடுத்­து­ரைத்­தார்.
இவற்­றி­னால் இந்த நாட்­டில் தொடர்ந்­தும் வாழ முடி­யாது என்ற நிலைப்­பாட்­டில் அநேக தமிழ் மக்­கள் நாட்டை விட்­டு­வெ­ளி­யேறி உல­கின் பல பாகங்­க­ளி­லும் வாழ்ந்து வரு­வ­தா­க­வும், இந்த நிலைமை தொடர்ந்­தும் நீடிக்க முடி­யாது என்­றும் தெரி­வித்­தார்.
வாக்­கு­று­தி­கள் நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை
பன்­னாட்­டுச் சமூ­கத்­திற்கு இலங்கை அரசு வழங்­கிய வாக்­கு­று­தி­களை மீண்­டும் வலி­யு­றுத்­திய இரா.சம்­பந்­தன், பயங்­க­ர­வா­தத் தடைச்­சட்­ட­தினை நீக்­கு­வ­தில் காட்­டப்­ப­டு­கின்ற நீண்ட தேவை­யற்ற இழுத்­த­டிப்­புக்­கள் தொடர்­பில் தமது அதி­ருப்­தி­யைத் தெரி­வித்த இரா.சம்­பந்­தன், இந்­தச் சட்­ட­மா­னது நீக்­கப்­ப­டு­வ­தன் அவ­சி­யத்­தி­னை­யும் வலி­யு­றுத்­தி­னார்.
தமிழ் அர­சி­யல் கைதி­க­ளின் நிலைமை குறித்து உறுப்­பி­னர்­க­ளைத் தெளி­வு­ப­டுத்­திய தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வர், பல கைதி­கள் எந்­த­வொரு விசா­ர­ணை­யு­மின்றி பல ஆண்­டு­க­ளாக சிறை­க­ளில் இருக்­கி­றார்­கள் என்­றும் அவர்­கள் அத்­தனை பேரும் மேலும் தாம­தங்­க­ளின்றி விடு­தலை செய்­யப்­ப­ட­வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்­தி­னார். நிலை­மாற்­று­கா­ல­நீ­திப் பொறி­மு­றை­கள், படை­யி­னர்­வ­ச­முள்ள பொது­மக்­க­ளின் காணி­வி­டு­விப்பு போன்ற விட­யங்­க­ளி­லும் அர­சின் செயற்­பாடு மிக மந்­த­க­தி­யி­லேயே இடம்­பெ­று­வ­தி­னை­யும் சுட்­டிக்­காட்­டி­னார்.
பன்­னாட்­டுச் சமூ­கம் ஞாப­க ­மூட்­ட­வேண்­டும்
அரசு வழங்­கிய வாக்­கு­று­தி­கள் நிறை­வேற்­று­வ­த­னைப் பன்­னாட்­டுச் சமூ­கம் உறுதி செய்­ய­வேண்­டும் என்­ப­தனை வலி­யு­றுத்­திய இரா.சம்­பந்­தன், இலங்கை அர­சுக்­கான பன்­னாட்­டுச் சமூ­கத்­தின் ஆத­ர­வா­னது நிபந்­த­னைக்­குட்­பட்­டது என்­ப­தனை பன்­னாட்­டுச் சமூ­கம் இலங்கை அர­சுக்கு ஞாப­கப்­ப­டுத்த வேண்­டும் என்­றும் வலி­யு­றுத்­தி­னார். இலங்கை அர­சா­னது தனது கட­மை­யி­னைச் செய்­ய­வேண்­டும் என­வும் அதி­லி­ருந்து விலக முடி­யாது என­வும் தெரி­வித்­தார்.
மேலும் பன்­னாட்­டுச் சமூ­க­மா­னது தமிழ் மக்­க­ளைப் பாது­காக்க வேண்­டிய பொறுப்­பி­னைக் கொண்­டுள்­ள­த­னை­யும் இரா.சம்­பந்­தன் வலி­யு­றுத்­தி­னார்.
இரா­ஜ­தந்­திர நடை­முறை
சம்­பந்­த­னின் விவே­க­மான இரா­ஜ­தந்­திர நடை­முறை யதார்த்­த­மான தலை­மைத்­து­வத்­துக்கு நன்றி தெரி­வித்த ஐரோப்­பிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள், தமிழ்த் தேசி­யக் கூட்­ட­மைப்­பின் தலை­வ­ரின் கருத்­துக்­க­ளுக்கு தாம் மிக முக்­கி­யத்­து­வம் கொடுப்­ப­தா­க­வும், இந்த விட­யங்­கள் தொடர்­பில் தமது சொந்த நாட்டு அர­சு­டன் ஐரோப்­பிய ஒன்­றி­யத்­தில் எடுத்­து­ரைப்­ப­தா­க­வும் உறு­தி­ய­ளித்­த­னர் – -என்­றுள்­ளது.

About Unknown