அவுஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்டில் இடம்பெற்றுவரும் பொதுநலவாய விளையாட்டு விழாவில் 52 கிலோ கிராம் எடைப்பிரிவு ஆண்களுக்கான குத்துச்சண்டை போட்டியில் இலங்கையின் இஷான் பண்டார வெண்கலப்பதக்கத்தை இலங்கைக்கு பெற்றுக்கொடுத்துள்ளார்.
இந்திய வீரரிடமே இஷான் பண்டார அரையிறுதிப் போட்டியில் தோல்வியடைந்து வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.