குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் கணவர் ஒருவர் மது அருந்தி வீட்டுக்சென்றபோது அவருக்கும் மனைவிக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக மனைவியின் கழுத்துப்பகுதியில் கூர்மையான போத்தலால் குத்தியுள்ளார்.
இச் சம்பவத்தில் குடவெல தெற்கு வெலிவேரிய பிரதேசத்தில் வசித்துவந்த 22 வயதுடைய இளம் மனைவியே உயிரிழந்துள்ளார்.
மனைவியை கொலை செய்த 26 வயதான கணவர் பொலிஸாரினால் கைதுசெயயப்பட்டுள்ளார்.
இதுதொடர்பாக மேலதிக விசாரணைகளை தங்காலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.