அகலவத்தை கலவெல்லாவப் பிரதேசத்தில் இடம் பெற்ற கார் விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து இன்று நடந்தது.
காரின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதனால் வீதியை விட்டு விலகி பாலத்துடன் மோதியே விபத்துக்குள்ளானது எனத் தெரிவிக்கப்பட்டது.
விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை, மகன், மகனின் பிள்ளை ஆகியோர் படுகாயமடைந்து ஹெரணை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். இதில் சிகிச்சைப் பலனின்றி தந்தையும், மகனும் உயிரிழந்தனர்.
உயிரிழந்த மகன் அமைச்சர்களின் பாதுப்புப் பிரிவில் சேவை புரியும் பொலிஸ் அதிகாரி என விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.