மோட்டார் சைக்கில் விபத்து - Eelatheepam Sri Lankan Breaking NEWS

மோட்டார் சைக்கில் விபத்து


வவுனியா - வைரவப்புளியங்குளம் பகுதியில் நேற்று  மாலை 6 மணியளவில் 3 நபர்களுடன் அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் முச்சக்கரவண்டியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் பெண் உட்பட நால்வர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கதிரேசன் வீதியூடாக ரயில் நிலையம் நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி மீது வைரவப்புளியங்குளம் வைரவர் கோவில் வீதி இரண்டாம் ஒழுங்கையிலிருந்து கதிரேசன் வீதி நோக்கி 3 இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிளே மோதி விபத்துக்குள்ளானது.
இவ் விபத்தில் முச்சக்கரவண்டியில் பயணித்த பெண் உட்பட சாரதி மற்றும் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த மோட்டார் சைக்கிள் சாரதிக்கு தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரம் காணப்படுவதுடன் இவர்கள் பாடசாலை மாணவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

About Unknown