சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு மே மாதம் 1 ஆம் திகதி அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட அரச விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது.
இவ்வருடம் ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி வெசாக் பௌர்ணமி என்பதனால் அதனைத் தொடர்ந்து வரும் ஒரு வார காலம் வெசாக் வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமையை அடுத்து மே தின கொண்டாட்டங்கள் மே மாதம் 7 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.
அதற்கமைய மே தின கூட்டங்கள், ஊர்வலங்கள் மே மாதம் 7 ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ள நிலையில் அன்றைய தினத்தை வங்கி, அரச மற்றும் வர்த்தக விடுமுறை தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.