பொது மக்களின் பணத்தை வீணாக செலவழிக்க வேண்டாம் ; என்கிறார் மஹிந்த.... - Eelatheepam Sri Lankan Breaking NEWS

பொது மக்களின் பணத்தை வீணாக செலவழிக்க வேண்டாம் ; என்கிறார் மஹிந்த....


இலங்கை பொதுஜன முன்னணியின் தெரிவு செய்யப்பட்ட மேயர் மற்றும் பிரதேச சபைத் தலைவர்கள் உள்ளிட்டோர்  பொதுமக்களின் நிதியை வீணாக செலவழிப்பதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

சில மாநகர சபைகள், நகர்ப்புர சபை மற்றும் பிரதேச சபைகளின் தலைவர் பொதுமக்கள் நிதிகளை பெருமளவில் பொது விழாக்களுக்கு செலவழிப்பதாகவும்  தெரிவித்துள்ளார். 
வருமானம் குறைந்த  மக்களிடம் அறவிடப்படும் பணத்தை செலவழிப்பதாகவும்  தற்போதைய அரசாங்கமானது நகர சபைகள், மாநாகர சபை மற்றும் பிரதேச சபை ஆகியவற்றின் நிதிகளை    பொது விழாக்களுக்கு செலவழிப்பதாகவும் இந்த பணத்தை மக்களின் நலனுக்காக பயன்படுத்த வேண்டும் என  முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ மேலும் தெரிவித்துள்ளார். 

About Unknown