புத்தாண்டை முன்னிட்டு நாட்டின் சகல பகுதிகளிலும் உள்ள மதுபானசாலைகளை எதிர்வரும் 13 ஆம் ,14ஆம் திகதிகளிலும் வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு 29 ஆம், 30 ஆம் திகதிகளிலும் மூடுவதற்கு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
அந்தவகையில் இந்த மாதத்தில் நான்கு நாட்கள் மதுபானசாலைகளை மூடவேண்டும் என அரசாங்கம் கட்டாய அறிவித்தலை விடுத்துள்ளது. தமிழ், சிங்கள புத்தாண்டை முன்னிட்டு எதிர்வரும் 13, 14 ஆம் திகதிகளிலும், அதன் பின்னர் இந்த மாத இறுதியில் வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு 29,30 ஆம் திகதிகளிலும் நாட்டில் உள்ள சகல மதுபானசாலைகளையும் மூட அரசாங்கம் உத்தரவு விடுத்துள்ளது.
மேலும் தமிழ்–சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் நாட்டில் குற்றங்கள் மற்றும் மதுபான விற்பனைக்கு உரிமம் பெற்ற இடங்களில் இடம்பெறும் முறைகேடுகளை தடுப்பதற்காக சிறப்பு கண்காணிப்பு வேலைத்திட்டமொன்றை மதுவரித் திணைக்களம் முன்னெடுக்கவுள்ளது. முறை கேடாக இடம்பெறும் சம்பவங்கள் தொடர்பில் முறைப்பாடுகளை பதிவு செய்ய 0112045077 என்றதொலைபேசி இலக்கத்திற்கு அல்லது 0112877882 என்ற தொலைநகல் இலக்கத்திற்கு அறிவிக்குமாறு மதுவரித் திணைக்களம் கோரிக்கை விடுத்துள்ளது.