2017ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் வடக்கு மாகாணம் தொடர்ந்தும் 9ஆவது இடத்திலேயே உள்ளது. கிழக்கு மாகாணம் 8ஆவது இடத்தில் உள்ளது.
மன்னார் மாவட்டம் 2016ஆம் ஆண்டு 19ஆவது இடத்திலிருந்து கடந்த ஆண்டு 12ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. வவுனியா மாவட்டம் 2016ஆம் ஆண்டு 16ஆவது இடத்திலிருந்து கடந்த ஆண்டு 18ஆவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளது. முல்லைத்தீவு மாவட்டம் 2016ஆம் ஆண்டு 23ஆவது இடத்திலிருந்து 24ஆவது இடத்துக்குப் பின்தள்ளப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண மாவட்டம் 2016ஆம் ஆண்டு 20ஆவது இடத்திலிருந்து கடந்த ஆண்டு 19ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. கிளிநொச்சி மாவட்டம் 2016ஆம் ஆண்டு இருந்த அதே 25ஆவது இடத்தில் கடந்த ஆண்டும் உள்ளது.
மாகாணம்
2016ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்தில் 10 ஆயிரத்து 562பேர் உயர்தரத்துக்கு தகுதி பெற்றனர். இது பரீட்சைக்குத் தோற்றியோரில் 60.66 சதவீதமாகும். 2017ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்தில் 11 ஆயிரத்து 901 பேர் உயர்தரத்துக்கு தகுதி பெற்றுள்ளனர். இது பரீட்சைக்குத் தோற்றியோரில் 66.12 சதவீதமாகும்.
தேசிய ரீதியில் வடக்கு மாகாணம் 2016ஆம் ஆண்டும் இறுதி மாகாணமாக – 9ஆவது மாகாணமாக இருந்தது. கடந்த ஆண்டும் அதே இடத்தில் உள்ளது. தென்மாகணமாகவே முதலிடத்தில் உள்ளது.
மாவட்டம்
யாழ்ப்பாண மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டு 5 ஆயிரத்து 847பேர் உயர்தரத்துக்கு தகுதி பெற்றிருந்தனர். இது பரீட்சைக்குத் தோற்றியோரில் 61.98 சதவீதமாகும். கடந்த ஆண்டு 6 ஆயிரத்து 219பேர் உயர்தரத்துக்கு தகுதி பெற்றுள்ளனர். இது பரீட்;சைக்குத் தோற்றியோரில் 67.77 சதவீதமாகும்.
கிளிநொச்சி மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டு ஆயிரத்து 38பேர் உயர்தரத்துக்கு தகுதி பெற்றிருந்தனர். இது பரீட்சைக்குத் தோற்றியோரில் 49.31 சதவீதமாகும். கடந்த ஆண்டு ஆயிரத்து 420பேர் உயர்தரத்துக்கு தகுதி பெற்றுள்ளனர். இது பரீட்சைக்குத் தோற்றியோரில் 57.17 சதவீதமாகும்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டு 927பேர் உயர்தரத்துக்கு தகுதி பெற்றிருந்தனர். இது பரீட்சைக்குத் தோற்றியோரில் 57.22 சதவீதமாகும். கடந்த ஆண்டு ஆயிரத்து 158பேர் உயர்தரத்துக்கு தகுதி பெற்றுள்ளனர். இது பரீட்சைக்குத் தோற்றியோரில் 61.46 சதவீதமாகும்.
மன்னார் மாவட்டத்தில் 2016ஆம் ஆயிரத்து 90பேர் உயர்தரத்துக்கு தகுதி பெற்றிருந்தனர். இது பரீட்சைக்குத் தோற்றியோரில் 63.56 சதவீதமாகும். கடந்த ஆண்டு ஆயிரத்து 251பேர் உயர்தரத்துக்கு தகுதி பெற்றுள்ளனர். இது பரீட்சைக்குத் தோற்றியோரில் 71.44 சதவீதமாகும்.
வவுனியா மாவட்டத்தில் 2016ஆம் ஆண்டு ஆயிரத்து 660பேர் உயர்தரத்துக்கு தகுதி பெற்றிருந்தனர். இது பரீட்சைக்குத் தோற்றியோரில் 65.35 சதவீதமாகும். கடந்த ஆண்டு ஆயிரத்து 853பேர் உயர்தரத்துக்கு தகுதி பெற்றுள்ளனர். இது பரீட்சைக்குத் தோற்றியோரில் 68.53 சதவீதமாகும்.