ஜெர்மனியின் முன்ஸ்டர் நகரில் சனிக்கிழமை மாலை மக்கள் விடுமுறை தினத்தை குடும்பத்தினருடன் கழித்துக் கொண்டிருந்தனர். அங்குள்ள வீதியொன்றைக் கடப்பதற்காக பொதுமக்கள் கூட்டமாக நின்றிருந்தனர்.
அப்போது அங்கு வந்த வாகனம் ஒன்று வீதியைக் கடக்கவிருந்த மக்கள் கூட்டத்தின் மீது வேகமாக மோதியது. இந்த தாக்குதலில் தாக்குதலை மேற்கொண்ட வாகன சாரதியுட்பட 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இதில் 30 பேர் காயம் அடைந்ததுள்ளனர்.
தாக்குதலை மேற்கொண்ட வாகனத்தை ஓட்டி வந்த சாரதி, மக்கள் கூட்டத்தின் மீது மோதியதும் துப்பாக்கியை எடுத்து தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டுள்ளதால் இதுவொரு தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என்ற கோணத்தில் பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்த தாக்குதலை தொடர்ந்து அந்த பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
இவ்வாறு தாக்குதலை மேற்கொண்ட நபர் ஜெர்மன் பிரஜையென முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.