சுயமாக சுதந்திரத்தை பிரகடனப்படுத்திக் கொண்டுள்ள சோமாலிலாந்து பிராந்தியத்தை மீளவும் சோமாலியாவுடன் இணைப்பதற்கு பரிந்துரை செய்யும் கவிதையொன்றை எழுதியமைக்காக இளம் பெண் கவிஞர் ஒருவருக்கு 3 வருட சிறைத்தண்டனை விதித்து சோமாலிலாந்து நீதிமன்றமொன்று தீர்ப்பளித்துள்ளது.
நசிமா குவோரேன் என்ற பெண் கவிஞருக்கே இவ்வாறு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் நசிமாவின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக மனித உரிமைக் குழுக்கள் குற்றஞ்சாட்டியுள்ளன.
சோமாலிலாந்தானது 1991 ஆம் ஆண்டு சோமாலியாவிலிருந்து சுதந்திரத்தை சுயமாக பிரகடனப்படுத்திக் கொண்டுள்ள போதும், அந்த சுதந்திரத்திற்கு சர்வதேச ரீதியான அங்கீகாரம் இதுவரை கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.