அரசாங்கத்தின் வெசாக் பண்டிகை இம்முறை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் குருணாகலில் நடைபெறவுள்ளது.
இதன்படி எதிர்வரும் 26 ஆம் திகதி முதல் மே மாதம் 2 ஆம் திகதி வரை வெசாக் காலமாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இம்முறை கொண்டாடப்படவுள்ள அரச வெசாக் பண்டிகை 2562 ஆம் ஸ்ரீ பௌத்த வருடத்திற்கானதாகும். இவ்வருடம் நடைபெறும் அரச வெசாக் பண்டிகை குருணாகலில் அமைந்துள்ள வரலாற்று முக்கியத்துவமிக்க தேவகிரி ரஜமஹா விகாரையை மையமாக கொண்டு இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வுகள் இம்மாதம் 26ஆம் திகதி ஆரம்பமாகி மே மாதம் 2 ஆம் திகதி முடிவடையும்.
அரச வெசாக் தினத்துடன் இணைந்த வகையில் வெசாக் கிரியைகளும் மேற்கொள்ளப்படவுள்ளதுடன் பல நிகழ்ச்சிகளை நடத்து வதற்கும் அரசாங்கம் உத்தே சித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.