இலங்கை குறித்த முதலாவது விவாதம் இன்று : நியாயங்களை வெளிப்படுத்த இரு தரப்புக்களும் தயார் நிலையில் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

இலங்கை குறித்த முதலாவது விவாதம் இன்று : நியாயங்களை வெளிப்படுத்த இரு தரப்புக்களும் தயார் நிலையில்

Related imageஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில்  நடைபெற்றுவருகின்ற நிலையில் இன்று   வௌ்ளிக்கிழமை இலங்கை  மனித உரிமை நிலைவரம் குறித்த பூகோள காலக்கிரம மீளாய்வு குறித்த விவாதம்  நடைபெறவுள்ளது.
 பரப்பான சூழலிலும் பல்வேறு தரப்பினரும்  ஜெனிவாவில் முகாம் இட்டுள்ள நிலையிலும்  இலங்கை தொடர்பான முதலாவது விவாதம்  இன்று  நடைபெறுகிறது.  
ஜெனிவாவில் இம்முறை இரண்டு  விவாதங்கள் இலங்கை  தொடர்பில்   நடைபெறவுள்ள நிலையிலேயே     முதலாவது விவாதம் இன்று இடம்பெற ஏற்பாடாகியிருக்கிறது. 
கடந்த  2015 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டு  மீண்டும்  2017 ஆம் ஆண்டு இரண்டு வருட கால நீடிப்புக்கு உள்ளாகிய  இலங்கை குறித்த பிரேரணையின் அமுலாக்கத்தை  அடிப்படையாகக்கொண்டே  இன்றைய  விவாதம் நடைபெறவுள்ளது. 
ஏற்கனவே இலங்கை குறித்த பூகோள காலக்கிரம மீளாய்வு அமர்வு கடந்த நவம்பர்  மாதம்  ஜெனிவாவில் நடைபெற்றது.  அதன்போது இலங்கை  குறித்த  பல்வேறு  பரிந்துரைகள் அடங்கிய   அறிக்கை ஒன்றும்  ஜெனிவாவில்  நிறைவேற்றப்பட்டது.  
அந்த அறிக்கையில் 50 க்கும் மேற்பட்ட  நாடுகளினால் 100 க்கும் மேற்பட்ட  பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டிருந்ததுடன்  அவை திருத்தங்ளுடன் நிறைவேற்றப்பட்டிருந்தன.   அதன்படி அந்தப் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம்  நிறைவேற்ற வேண்டுமென  வலியுறுத்தியே விவாதம் நடைபெற்றது.  
இதன்போது  மனித உரிமை பேரவை சார்பில் பிரதிநிதிகள்   உரையாற்றவிருக்கின்றனர். அத்துடன்   சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகளும்  சர்வதேச  அமைப்புக்களின் பிரதிநிதிகளும்   இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதிகளும்  இன்றைய தினம்  இந்த அமர்வில் உரையாற்றவிருக்கின்றனர்.  
இன்று  விவாதம் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் இடம்பெற்றுள்ளன.    ஜெனிவாவில் முகாமிட்டுள்ள அரசாங்கத் தரப்பு,பாதிக்கப்பட்ட தரப்பு மற்றும்  சர்வதேச தரப்பு என்பன  இன்றைய தினம்  தமது நிலைப்பாடுகளை வெளியிட தயாராகியுள்ளன. 
இதேவேளை  கடந்த நவம்பர் மாதம் ஜெனிவாவில் நடைபெற்ற பூகோள காலக்கிரம மீளாய்வு  தொடர்பான அமர்வில்  இலங்கை குறித்து நிறைவேற்றப்பட்ட   அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள  விடயங்கள் வருமாறு 
வெளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களை கொண்டு பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்கவேண்டும்.  அத்துடன் வடக்கு கிழக்கில் பொது மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவெண்டும். பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதுடன் ஐ.நா. பிரெரணையை முழுமையாக  அமுல்படுத்தவெண்டும்.     
  
காணாமல் போனோர் குறித்த அலுவலகத்துக்கு   சுயாதீன ஆணையாளர்களை நியமிக்கவேண்டும். ( தற்போது ஆணையாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது) 
அந்த அலுவலகத்துக்கு தேவையான வளங்கள் வழங்கப்படுவதுடன் சரியான அதிகாரிகளும் நியமிக்கப்படவேண்டும். 
இதற்கு முன்னர்  காணாமல் போனவர்கள் குறித்து ஆராய்ந்;த ஆணைக்குழுக்களின் அறிக்கைகள்  உடனடியாக வெளியிடப்படவேண்டும். 
காணாமல் போதல்கள் தன்னிச்சையான தடுத்து வைத்தல்கள் என்பன  தொடர்பில் சுயாதீனமான விசாரணை முன்னெடுக்கப்படுவதை உறுதிபடுத்தவேண்டும். தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள்  தொடர்பான விபரங்களை  உறவினர்களுக்கு வழங்குங்கள். 
யுத்தக் குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிக்க சர்வதேச உதவிகளை பெறவேண்டும்.  அத்துடன்   மனித உரிமை மீறலில் ஈடுபட்ட   படையினர் மற்றும் அரச அதிகாரிகளுக்கு எதிராக  சட்ட நடவடிக்கை எடுங்கள். ( இந்த பரிந்துரையை அமெரிக்கா முன்வைத்திருந்தது) சர்வதேச உதவியுடன்   நம்பகரமான    பாதிக்கபட்ட மக்களை  கேந்திரமாக கொண்ட   பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுக்கவேண்டும். உண்மையை கண்டறியும் ஆணைக்குழு நட்டஈடு வழங்கும்   அலுவலகம்  என்பனவற்றை நியமிக்கவேண்டும். 
வெ ளிநாட்டு நீதிபதிகள் மற்றும் வழக்கறிஞர்களை கொண்டு பொறுப்புக்கூறல் பொறிமுறையை உருவாக்குவதுடன் வடக்கு கிழக்கில் பொது மக்களின் காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கவெண்டும். இவ்வாறு பல்வேறு பரிந்துரைகள் இலங்கை குறித்த அறிக்கையில்  முன்வைக்கப்பட்டிருந்தன. 
இலங்கை  அரசாங்கம் சர்வதேச பங்களிப்புடன் பொறுப்புக்கூறல் பொறிமுறையை முன்னெடுத்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதியை நிலைநாட்ட வேண்டுமென தெரிவித்து 2015ஆம் ஆண்டு ஜெனிவா மனிதஉரிமை பேரவையின் 30 ஆவது கூட்டத்தொடரில் பிரேரணைஒன்றுநிறைவேற்றப்பட்டது.  அந்தப் பிரேரணைக்கு இலங்கை அரசாங்கமும் அனுசரணை வழங்கியிருந்தது. 

கடந்த 26 ஆம் திகதிஆரம்பமான ஐக்கிய நாடுகள் மனிதஉரிமை பேரவையின் 37 ஆவது கூட்டத் தொடர்எதிர்வரும்23 ஆம்  திகதியுடன்நிறைவடையவுள்ளமைகுறிப்பிடத்தக்கது. 

About Unknown