பொன்சேகாவுக்கு பொலிஸ் துறை அமைச்சை கொடுக்க முடியாவிட்டால், அதை ராஜித, சம்பிக்க, அர்ஜுன ஆகிய மூவரில் ஒருவருக்கு கொடுங்கள் என முற்போக்கு கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுவும் முடியாவிட்டால், எம்மால் திருடர்களை பிடிக்க முடியாது என ஜனாதிபதியும், பிரதமரும் இந்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரி கதையை முடிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பு மட்டக்குளிய போதி சமுத்ரா ராமவிஹாரையில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்ட போதே அமைச்சர் மனோ கணேசன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியும், பிரதமரும் மக்களுக்கு ஒரு நம்பும்படியான தீர்வை உடன் தர வேண்டும். மக்களின் பொறுமைக்கும் ஒர் எல்லையுண்டு. எங்கள் பொறுமைக்கும் ஒர் எல்லையுண்டு.
பிரதமரையோ, ஜனாதிபதியையோ மட்டும் நம்பி நாம் அரசியலுக்கு வரவில்லை. மக்களை நம்பியே தான் பொதுவாழ்வில் இருக்கிறேன் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.