இலங்கை வம்சாவளிப் பெண் அமெரிக்கத் தேர்தலில் போட்டி - Eelatheepam Sri Lankan Breaking NEWS

இலங்கை வம்சாவளிப் பெண் அமெரிக்கத் தேர்தலில் போட்டி

அமெரிக்காவின் மேரிலான்ட் பகுதியில் இடம்பெறவுள்ள ஆளுநர் தேர்தலில் இலங்கை பூர்வீகத்தை கொண்ட தமிழ் பெண் ஒருவர் போட்டியிடவுள்ளார்.
 இலங்கை பூர்வீகத்தை கொண்ட அமெரிக்க பெண்ணான கிரிஷாந்தி பிறந்து 9 மாதங்களாக இருந்த போது, இலங்கையின் உள்நாட்டு யுத்தத்தையடுத்து அமெரிக்காவின் மேரிலான்ட்டில் பொற்றோருடன் குடியேறினார்.
37 வயதான கிரிஷாந்தி விக்னராஜா முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா நிர்வாகத்தின் போது, அவர் முதல் பெண்மணி மிச்ஷேல் ஒபாமாவின் கொள்கை இயக்குனராகவும், வெளியுறவுத்துறை செயலர் ஹிலாரி கிளிண்டன் மற்றும் மாநில செயலாளர் ஜோன் கெரி ஆகியோரின் மூத்த ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்
 இந்நிலையில், கிரிஷாந்தி மேரிலான்ட் ஆளுநருக்கான போட்டியில் போட்டியிடப்போவதாக கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் அறிவித்திருந்தார்.
மேரிலான்டின் அதன் 14 மத்திய மற்றும் மாநில அளவிலான அலுவலகங்களுக்கு பெண்கள் தேர்ந்தெடுக்கப்படவில்லையெனவும் பொது அலுவலகங்களில் பெண்களின் தேவை அதிகமாக காணப்படுகின்ற நிலையில், அதனை முன்நிறுத்தி தான் போட்டியிடுவதாக அவர் ஊடகங்களில் தெரிவித்துள்ளார்
 அமெரிக்காவின் மேரிலான்ட பகுதியில் இடம்பெறவுள்ள ஆளுநர் தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 6 ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இதேவேளை, 2018 ஆம் ஆண்டு ஜனநாயகக் கட்சி வேட்பாளராக போட்டியிடும் முதல் பெண் கிரிஷாந்தி விக்னராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

About Unknown