அரசியல் உதவியுடன் இயங்கிவந்த விபசார விடுதி சுற்றிவளைப்பு - Eelatheepam Sri Lankan Breaking NEWS

அரசியல் உதவியுடன் இயங்கிவந்த விபசார விடுதி சுற்றிவளைப்பு

Related imageகல்கிஸ்ஸையில் பல வருடங்களாக ஆயுள்வேத நிலையம் என்ற போர்வையில் இரகசியமாக இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று கல்கிஸ்ஸை பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு நேற்று நால்வர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்துள்ளனர்
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, 
கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெரலபாரே பிரதேசத்தில் பல வருடங்களாக ஆயுள்வேத நிலையம் என்ற போர்வையில் மிக இரகசியமாக இயங்கி வந்த விபச்சார விடுதியொன்று கல்கிஸ்ஸை பொலிஸாரால் சுற்றிவளைக்கப்பட்டு நால்வர் அடங்கிய குழுவொன்று கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 
கல்கிஸ்ஸை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற விசேட தகவலின் அடிப்படையில் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தினால் வழங்கப்பட்ட பிடியாணையின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே குறித்த நால்வரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர். 
சுமார் 8 வருடங்களுக்கும் அதிகமாக மிகவும் சூட்சுமமான முறையில் மிக இரகசியமாக பல அரச தலைவர்கள் மற்றும் பிரமுகர்களின் வருகையினுடன் ஆயுள்வேத நிலையம் என்ற போர்வையில் செயற்பட்டுவந்த விபச்சார விடுதியொன்றே இவ்வாறு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. 
இந்த சுற்றிவளைப்பின் போது பாணந்துறை, மத்துகம, காலி மற்றும் பெந்தர பிரதேசத்தைச் சேர்ந்த 29, 32, 33 மற்றும் 35 வயதுடைய நான்கு பெண்களே கைதுசெய்யப்பட்டுள்ளனர். இதில் மூவர் விபசாரத்தின் பயன்படுத்துவதற்காக தயாராக காணப்பட்ட நிலையில் பாணந்துறையை சேர்ந்த பெண் ஒருவரே நிலைய முகாமையாளராக கடமையாற்றிய வந்த நிலையில் கைதுசெய்யப்பட்டுள்ளார். 
1200 ரூபா செலுத்தி இந்த நிலையத்தில் உள்நுழைவதுடன் தமது தேவைகளுக்கேற்ப பல்வேறு விலைகளில் பெண்கள் இந்நிலையத்திற்குள்ளேயே விபச்சாரத்தில் ஈடுபடுத்தப்படுவதாகவும் தெரியவந்துள்ளது. 
அவற்றுடன் கடந்த 8 வருடங்களுக்கும் அதிகமாக மிகவும் இரகசியமான முறையில் பல அரசியல் பிரமுகர்கள் மற்றும் பாடசாலை சிறுவர்கள் முதல் பல்வேறு பட்ட தரப்பினர் இப்பிரதேசத்திற்கு வந்து சென்றுள்ளதாகவும் பிரதேசவாசிகள் தெரிவித்தனர். 
இந்நிலையில் கல்கிஸ்ஸை பிரதி பொலிஸ் பரிசோதகர்  ரோஹன புஷ்பகுமாரவின் தலைமையின் கீழ் உதவி பொலிஸ் பரிசோதகர் சஞ்சீவ சில்வா, உதவி பொலிஸ் பரிசோதகர் சுமிந்த ஜெயலத், கான்ஸ்டபிள்களான 72315 சம்பத், 23295 சந்தருவான், 33593 நிரோஷன், 40527 குமார, 80333 புபுது 
பெண் கான்ஸ்டபிள்களான 9901 கிருஷ்ன வேணி மற்றும் 7524 குமாரி குழுவினாலேயே சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 
இச்சுற்றிவளைப்பினைத் தொடர்ந்து இன்று குறித்த நால்வரும் கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதுடன் நீதவான் அவர்களை கடும் நிபந்தனைகளின் அடிப்படையில் விடுவித்துள்ளார். இச்சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர். 

About Unknown