உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்­களின் பெயர்கள் வர்த்­த­மா­னியில் வெளியீடு - Eelatheepam Sri Lankan Breaking NEWS

உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்­களின் பெயர்கள் வர்த்­த­மா­னியில் வெளியீடு

Image result for வர்த்­த­மா­னிஉள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலில் தெரிவு செய்­யப்­பட்ட உறுப்­பி­னர்­களின் 10 மாவட்­டங்­க­ளுக்­கான  பெயர் பட்­டியல் நேற்று வர்த்­த­மா­னியில் வெளி­யி­டப்­பட்­டது. எஞ்­சிய  15 மாவட்­டங்­களை சேர்ந்த உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்­களின் பெயர்கள் இன்னும் வெளி­யி­டப்­ப­ட­வில்லை
 இதன்­படி இன்னும் ஒரு சில தினங்­களில்15 மாவட்­டங்­களின் உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்­களின் பெயர் பட்­டியல் வர்த்­த­மா­னியில் வெளி­யி­டப்­படும்.
இது தொடர்பில் மேலும் தெரி­ய­வ­ரு­வ­தா­வது,
உள்­ளூ­ராட்சி மன்ற தேர்தல் புதிய தேர்தல் முறை­மையின் பிர­காரம் பெப்­ர­வரி மாதம் 10 ஆம் திகதி நடைப்­பெற்­றது. இந்த புதிய முறை­மையின் பிர­காரம் 60 வீதம் தொகு­தி­வா­ரி­யா­கவும் 40 வீதம் விகி­தா­சாரம் மூல­மா­கவும் உறுப்­பி­னர்கள் தெரிவு செய்­யப்­பட்­டனர். 
அத்­துடன் இந்தத் தேர்­தலில் 25 சத­வீத பெண் பிர­தி­நி­தித்­து­வமும் அமு­லுக்கு வந்­தது. இதன்­கா­ர­ண­மாக உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை 8325 ஆக அதி­க­ரித்­தது.   அனைத்து உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை அதி­க­ரித்­த­மை­யினால் உள்­ளூ­ராட்­சி­மன்­றங்­களில்  போதிய இட­வ­ச­தி­களும் குறை­வா­கவே காணப்­ப­டு­கின்­றது. 
குறிப்­பாக கொழும்பு மாந­கர சபை உறுப்­பி­னர்­களின் எண்­ணிக்கை அதி­க­மாக இருப்­ப­தனால் ஆரம்ப கூட்­டத்­தொ­டரை பண்­டா­ர­நா­யக்க சர்­வ­தேச ஞாப­கார்த்த மண்­ட­பத்தில் நடத்த தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது.
அத்­துடன் பெண் பிர­தி­நி­தித்­து­வங்­களை  உறு­தி­ப­டுத்­து­வ­திலும் பெரும் நெருக்­க­டி­யான நிலைமை ஏற்­பட்­டுள்­ளது. அந்த நிலை­யி­லேயே பத்து மாவட்­டங்­களின் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான உறுப்­பி­னர்­களின் பெயர் பட்­டியல் நேற்று வர்த்­த­மா­னியில் வெளி­யி­டப்­பட்­டது. 
இதன்­பி­ர­காரம் அம்­பாந்­தோட்டை, மாத்­தறை, கிளி­நொச்சி,புத்­தளம்,மொன­ரா­கலை, அநு­ரா­த­புரம், களுத்­துறை,இரத்­தி­ன­புரி, மாத்­தளை மற்றும் பொலன்­ன­றுவை ஆகிய மாவட்­டங்­களின் உள்­ளூ­ராட்சி மன்ற உறுப்­பி­னர்­களின் பெயர் பட்­டி­யலே நேற்று வர்த்­த­மா­னியில் வெளி­யி­டப்­பட்­டது. 
எனினும் கொழும்பு, கண்டி, காலி, நுவரெலியா, யாழ்ப்பாணம், கம்பஹா,பதுளை,அம்பாறை,மட்டகளப்பு,திருகோணமலை,முல்லைதீவு,மன்னார்,குருநாகல் ஆகிய மாவட்டங்களின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களுக்கான பெயர் பட்டியல் இன்னும் ஒரு சில நாட்களில் வெளியிடப்படும்.

About Unknown