அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வண்ணமயமான 90-வது ஆஸ்கார் விருது வழங்கும் விழா 05.03.2018 நடந்தது. முன்னதாக மறைந்த நடிகர், நடிகைகள் மற்றும் கலைஞர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது.
அதில் சமீபத்தில் மரணமடைந்த நடிகை ஸ்ரீதேவிக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அதேபோன்று மறைந்த இந்தி நடிகர் சசிகபூருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது.
மேலும் மறைந்த ஹாலிவுட் நடிகர்கள் ஜேம்ஸ்பாண்டு ரோஜர் மோர், மேரி கோல்ட் பெர்க், ஜான் ஜான்சன், ஜான் கியார்டு, சாம்ஷெப்பர்டு ஆகியோருக்கும் இரங்கல் தெரிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. அப்போது விழாவில் பங்கேற்ற அனைவரும் ஒரு நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினர்.