6.9 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை!!! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

6.9 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் சுனாமி எச்சரிக்கை!!!

Related imageபப்புவா நியூ கினியாவில் இன்று அதிகாலை  6.9 ரிக்டர் அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் அங்கு சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கதால் வீடுகள், கட்டிடங்கள், விடுதிகள்  என அனைத்தும் அதிர்ந்ததால்  மக்கள் சாலையில் தஞ்சம் அடைந்தனர்.
இந்த நிலநடுக்கம் 6.9 ரிக்டர் அளவில் பசபிக் கடல் பகுதியை ஒட்டி சுமார் 35 கிலோ மீட்டர் ஆழத்தில் பூமிக்கு அடியில் ஏற்பட்டுள்ளது. அதனால் கடற்கரையில் வழக்கத்தைவிட உயரமான அலைகள் எழும்பின. எனவே சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விபரங்கள் பற்றிய தகவல் இன்னும் வெளியாகவில்லை. இதனால் உயிரிழப்பு அதிகமாக இருக்க கூடும் என சர்வதேச ஊடகங்கள் செய்தி  வெளியிட்டுள்ளன.

About Unknown