அண்டார்டிகாவில் 403 நாட்கள் தங்கி 56 வயது இஸ்ரோ பெண் விஞ்ஞானி மங்கள மணி சாதனை - Eelatheepam Sri Lankan Breaking NEWS

அண்டார்டிகாவில் 403 நாட்கள் தங்கி 56 வயது இஸ்ரோ பெண் விஞ்ஞானி மங்கள மணி சாதனை

குளிர்பிரதேசமான அண்டார்டிகாவில் 56 வயதான மங்கள மணி என்ற இஸ்ரோ விஞ்ஞானி ஓராண்டுக்குமேல் தங்கி சாதனை படைத்துள்ளார். அண்டார்டிகாவில் பாரதி என்ற ஆய்வு மையத்தை இந்தியா நிறுவியுள்ளது. இதில் பணியாற்றுவதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் 23 பேர் கொண்ட குழு 2016-ம் ஆண்டு நவம்பரில் அங்கு சென்றது. 

அந்த குழுவில் இடம்பெற்றிருந்த ஒரே பெண்மணி மங்கள மணி தான், -90 டிகிரி அளவுக்கு கடுமையான குளிர் வதைக்கும் சூழலில் அவர் அங்கு 403 நாட்கள் கழித்துவிட்டு இந்தியா திரும்பியுள்ளார். இதன்மூலம் அதிக நாட்கள் அண்டார்டிகாவில் தங்கிய முதல் இஸ்ரோ பெண்மணி என்ற சாதனையை இவர் பெற்றார். ஆண்களுக்கு உடலளவில் வலிமை என்றால், பெண்களுக்கு மனதளவில் வலிமையுடன் இருக்க வேண்டும் என்று மங்கள மணி கூறியுள்ளார்.  

About Unknown