லண்டனில் உள்ள ஒரு மத பள்ளியில் பணியாற்றிய 3 பேரை இங்கிலாந்து உளவுத்துறை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரணை நடத்தினார்கள்.
அப்போது இவர்கள் போலி பெயரில் அங்கு பணியில் சேர்ந்தது தெரியவந்தது. மேலும் அப்பள்ளியில் படிக்கும் குழந்தைகளுக்கு பயங்கரவாதம் குறித்து பயிற்சி அளித்துள்ளனர்.
கத்தியால் குத்துவது, மனித குண்டாக மாறுவது, கொலை செய்வது, பொது இடங்களில் பெரிய குண்டு வெடிப்பை நிகழ்த்துவது குறித்து இவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர்.
லண்டனில் நடந்த துப்பாக்கி சூடு, அமெரிக்காவின் இரட்டை கோபுர தாக்குதல், மும்பை தாக்குதல் வீடியோக்களை ஒளிபரப்பி உள்ளனர். அதன்மூலம் பயங்கரவாதிகளின் செயல்பாடு குறித்து வீடியோ மூலம் விளக்கியுள்ளனர்.
இக்குழந்தைகளை வைத்து புதிய பயங்கரவாத இயக்கம் தொடங்க திட்டமிட்டு இருந்தனர். இவர்களிடம் படித்த குழந்தைகளில் பெரும் பாலானவர்கள் 15 வயதிற்கும் குறைவானவர்கள்.
குழந்தைகளுக்கு பயங்கரவாதத்தை கற்றுக் கொடுத்த 3 பேரும் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களது பெயர் உமர் அகமது ஹாக், முகமது அபித், அபுதாகிர் மாமுன், குழந்தைகளை வைத்து குற்றங்கள் செய்தால் மாட்டாமல் தப்பிக்கலாம் என நினைத்து இச்செயலில் ஈடுபட்டதாக அவர்கள் கூறினர்.