2019 மக்களவை தேர்தலுக்கு தயாராகிறதா காங்கிரஸ் ? : திமுக உள்ளிட்ட 17 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு சோனியாகாந்தி இன்று விருந்து - Eelatheepam Sri Lankan Breaking NEWS

2019 மக்களவை தேர்தலுக்கு தயாராகிறதா காங்கிரஸ் ? : திமுக உள்ளிட்ட 17 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு சோனியாகாந்தி இன்று விருந்து

Image result for சோனியா காந்திதிமுக, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட 17 எதிர்க்கட்சி தலைவர்களுக்கு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி தலைவர் சோனியா காந்தி இன்று விருந்தளிக்கிறார்.மக்களவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் எதிர்கட்சிகளிடம் ஒருங்கிணைப்பு ஏற்படுத்தும் விதமாக ஐக்கிய முற்போக்குக் கூட்டணி   தலைவர் சோனியா காந்தி எதிர்க்கட்சி தலைவர்களுக்கு இன்று விருந்தளிக்கிறார்.

இந்த விருந்தில் திமுக சார்பில் மாநிலங்களைவை உறுப்பினர் கனிமொழி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் சுதிப் பாண்டியோபாத்யாய், சமாஜ்வாதி கட்சியின் ராம் கோபால் யாதவ், மார்க்சிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி. ராஜா உள்ளிட்ட 17 கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. 

இந்த விருந்தில் பங்கேற்க பகுஜன் சமாஜவாதி கட்சி தலைவர் மாயாவதிக்கு அழைப்பு விடுத்துள்ள போதிலும் அவர் விருந்தில் பங்கேற்கமாட்டார் என்று கூறப்படுகிறது. டெல்லியில் உள்ள சோனியா காந்தியின் இல்லத்தில் விருந்து நிகழ்ச்சி இன்று நடைபெறவுள்ளது. 

About Unknown