பண மோசடிக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதில் மூலோபாய குறைபாட்டையுடைய மற்றும் தீவிரவாதத்திற்கு நிதிவசதியளிக்கும் ஆட்சிமுறைகளை கருத்திற்கொண்டு ஐரோப்பிய ஒன்றியமல்லாத நாடுகளை உள்ளடக்கிய மேற்படி ஐரோப்பிய ஆணையகப் பட்டியலில் தியூனிஸியா, இலங்கை, திரினிடாட் மற்றும் டொபாகோ உள்வாங்கப்படுவதை நிராகரிக்க ஐரோப்பிய பாராளுமன்றத்தைச் சேர்ந்த சில உறுப்பினர்கள் தீவிர முயற்சி எடுத்துக் கொண்ட போதும், அவர்கள் அதற்குத் தேவையான 376 அறுதிப் பெரும்பான்மை வாக்குகளை எட்டத் தவறியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த புதன்கிழமை இடம்பெற்ற இந்தப் பிரச்சினை தொடர்பான வாக்களிப்பில் மேற்படி நடவடிக்கைக்கு ஆதரவாக 357 வாக்குகளும் எதிராக 283 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதேசமயம் 26 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
தியூனிஸியா இந்தப் பட்டியலில் உள்ளடக்கப்படுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து ஐரோப்பிய பாராளுமன்றத்தைச் சேர்ந்த சில உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்ட பிரேரணையை அடிப்படையாக வைத்து மேற்படி வாக்களிப்பு நடத்தப்பட்டது.
இந்நிலையில் வட ஆபிரிக்க நாடான தியூனிஸியா அந்தப் பட்டியலில் உள்வாங்கப்படுவது சரியானதல்ல என அந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் நம்புகின்றனர். அந்நாட்டை இந்தப் பட்டியலில் உள்ளடக்குவது அந்நாடு ஜனநாயகத்தை ஊக்குவிக்கும் வகை
யில் குற்றவியல் செயற்பாடுகளுக்கு எதிராக தனது நிதி முறைமையைப் பலப்படுத்தும் வகையில் அண்மையில் மேற்கொண்டிருந்த முன்னடியெடுத்து வைப்
புகளை அங்கீகரிக்கத் தவறும் ஒரு செயற்பாடு என மேற்படி உறுப்பினர்கள் கருதுகின்றனர். அத்துடன் இலங்கையும் திரினிடாட் டொபாகோவும் தியூனிஸியாவையொத்த செயற்பாடுகளை முன்னெடுத்துள்ளதாக அவர்கள் கூறுகின்றனர்.
ஐரோப்பிய ஒன்றியத்தின் பண மோசடிக்கு எதிரான கோட்பாட்டின் கீழான கடப்பாடுகளின் அங்கமாக ஐரோப்பிய ஆணையகம் அதி உயர் அபாய நிலையிலுள்ள மூன்றாம் உலக நாடுகளின் பட்டியலை காலத்துக்கு காலம் தயாரித்து வருகிறது.
மேற்படி பாராளுமன்றம் இந்த கறுப்புப் பட்டியல் குறித்த மறுப்பாணை (வீற்றோ) அதிகாரத்தைக் கொண்டுள்ளது. இது பண மோசடி மற்றும் தீவிரவாதிகளுக்கான நிதிவசதியளித்தல் என்பவற்றிலிருந்து ஐரோப்பிய நிதியியல் முறைமையை பாதுகாக்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் கவசமாக நோக்கப்படுகிறது.
எனினும் இந்தப் பட்டியல் பல மாத காலமாக ஐரோப்பிய ஆணையகத்துக்கும் ஐரோப்பிய பாராளுமன்றத்துக்குமிடையில் முரண்பாடு நிலவுவதற்கு ஒரு காரணமாக அமைந்தது.
.ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு முன்னர் இது தொடர்பில் தயாரிக்கப்பட்ட இரு பட்டியல்களை அந்தப் பட்டியல்களைத் தொகுக்க ஆணையகத்தால் பயன்படுத்தப்பட்டிருந்த முறைமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து நிராகரித்திருந்தனர். அதன் பிற்பாடு ஐரோப்பிய பாராளுமன்றம் மற்றும் ஐரோப்பிய ஆணையகம் ஆகிய இரு அமைப்புகளும் இந்த வருட இறுதியில் அறிமுகப்படுத்தப்படவுள்ள நாடுகளை சேர்த்தல் மற்றும் நீக்குதலுக்கான புதிய முறைமையொன்று தொடர்பில் அண்மையிலேயே இணக்கம் கண்டிருந்தன.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாத மத்தியில் ஐரோப்பிய ஆணையகம் சர்வதேச நிதியில் செயற்பாட்டு பணிக்குழுவின் வழிநடத்தலைப் பின்பற்றும் அதன் வழக்கத்தின் பிரகாரம் தியூனிஸியாவையும் இலங்கையையும் திரினிடாட் மற்றும் டொபாகோவையும் தனது கறுப்புப் பட்டியலில் உள்வாங்கத் தீர்மானித்ததையடுத்தே தற்போதைய சர்ச்சை தோன்றியுள்ளது. நீதி, பாவனையாளர் மற்றும் பால்நிலை சமத்துவத்திற்கான ஆணையாளர் வெரா ஜுவாரோவால் கடந்த திங்கட்கிழமை பாராளுமன்றத்திற்கு சமர்பிக்
கப்பட்டிருந்த அறிக்கையில், தியூனிஸியாவை அந்தப் பட்டியலிலிருந்து அகற்ற சில ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கையை நிராகரித்திருந்தார்.
அந்நாட்டில் இது தொடர்பில் ஏற்படக் கூடிய முன்னேற்ற நிலையை இந்த வருடத்தில் எவ்வளவு முடியுமோ அவ்வளவு வரைவில் ஆணையகம் மீள்மதிப்பீடு செய்யும் எனத் தெரிவித்த அவர், ஆனால் தாம் இன்னும் அங்கு செல்லவில்லை என்று கூறினார்.