குளிர்கால ஒலிம்பிக்கில் வடகொரியாவின் 'அழகு இராணுவப் படை - Eelatheepam Sri Lankan Breaking NEWS

குளிர்கால ஒலிம்பிக்கில் வடகொரியாவின் 'அழகு இராணுவப் படை

அர­சியல் ஆட்­டங்­க­ளாலும் வட கொரி­யாவின் கீழ் நிற்­ப­தாலும் மூன்று பக்­கங்களும் நீர் சூழப்­பட்­டுள்­ள­தாலும் தென் கொரி­யா­விற்கு அவ்­வப்­போது சிக்­கல்கள் வரு­வ­துண்டு. 
இத்­த­னைக்கும் அளவில் சிறி­யது என்­றாலும் வட கொரி­யா­வை­விட தென் கொரி­யா­வில்தான் மக்கள் தொகை அதிகம். 
அங்­கி­ருக்கும் பியாங்சாங் என்னும் இடத்­தில்தான் 2018-ஆம் ஆண்­டிற்­கான குளிர்­கால ஒலிம்பிக்ஸ் தற்­போது நடை­பெற்­றுக்­கொண்­டி­ருக்­கி­றது. 
இது 23ஆ-வது குளிர்­கால ஒலிம்பிக்ஸ் போட்டி. இதில் 92 நாடு­களைச் சேர்ந்த 2952 வீர, வீராங்­க­னைகள் பங்­கேற்­கின்­றனர்.
நிகழ்ச்­சியின் தொடக்­க நாள். பார்­வை­யா­ளர்கள் அமரும் இருக்­கைகள் இருக்கும் ஒரு பகுதி அது. தோரா­ய­மாக 200 பெண்கள் அமர்ந்­தி­ருக்­கி­றார்கள். எல்­லோரும் பதின் ­ப­ரு­வத்­தி­லி­ருந்து இரு­பத்­தைந்து வய­திற்­குள்­ளா­கவே இருந்­தனர். 
எல்­லோ­ருக்கும் ஒரே வண்­ணத்தில் சிவப்பு நிற உடை. 
கைகளைத் தட்­டு­கின்­றனர். உற்­சாகக் குரல் எழுப்பி கோவை­யாக மிகவும் சிரத்­தை­யுடன் செய்­யப்­பட்ட அது, ஒரு நட­னம்­போல காட்­சி­ய­ளிக்­கி­றது. 
அவர்­கள்தான் தென் கொரி­யாவில் வட­கொ­ரிய விளை­யாட்டு வீரர்­களை உற்­சா­கப்­ப­டுத்த வந்த ‘சியர்­லீடர்ஸ் குழு’.
ஆனால் அவர்­களின் பணி அது மட்­டு­மல்ல, வட கொரிய ஜனா­தி­பதி கிம்மின் கொள்­கை­க­ளையும் அவர்கள் நாட்டின் பெரு­மை­க­ளையும் அர­சியல் நிலைப்­பாட்­டையும் உல­கிற்குப் புரி­ய­வைக்­கவும் அவர்கள் அங்கே இருக்­கி­றார்கள்.   
வட கொரி­யாவின் ‘ஆர்மி ஒவ் பியூட்டிஸ்’ (Army of Beauties) என்று அழைக்­கப்­படும் அந்தக் குழு, பல வரு­டங்­க­ளுக்குப் பிறகு தங்கள் நாட்­டை­விட்டு முதன்­மு­த­லாக வெளி­வந்­தி­ருக்­கி­றது. 
எல்லா நிகழ்­விலும் ஒரு செய்­தி­யாக அவர்கள் இடம்­பெற்று விடு­கி­றார்கள். உலக ஊட­கங்­களும் அவர்­கள் குறித்து விவா­தித்துச் சலித்து விடு­கின்­றன. 
ஆனால் இம் முறை அவர்­க­ளுடன் சேர்ந்து வேெறாரு செய்­தியும் முக்­கிய இடத்தைப் பிடித்­தது.  
குளிர்­கால ஒலிம்பிக்ஸ் நிகழ்வைச் சீர்­கு­லைத்து, தென் கொரி­யாவைத் தலை­கு­னிய வைக்க ஒரு சைபர் அட்­டாக்கும் நிகழ்ந்­தி­ருக்­கி­றது. 
ஒலிம்பிக்ஸ் ெதாடக்­க­விழா நடை­பெ­று­வ­தற்குச் சற்று முன்பு, அந்­நி­கழ்ச்­சியின் இணை­ய­த்தளம் முடக்­கப்­பட்­டுள்­ளது. இதனால் ஒலிம்பிக்ஸ் போட்­டி­களைப் பார்க்க வந்த பார்­வை­யா­ளர்­க­ளுக்கு டிக்­கெட்டுக்கள் அச்­ச­டித்துக் கொடுக்க முடி­ய­வில்லை. 12 மணிநேரங்கள் போட்­டியை நடத்­து­ப­வர்­க­ளாலும் கூட எதையும் செய்ய முடி­ய­வில்லை. அந்த அள­விற்கு வீரியம் கொண்ட சைபர் தாக்குதல் அது. ஆனால் அதன்பிறகு அதை சரிசெய்துகொண்டு தற்போது போட்டி நடைபெற்று வருகிறது. 
92 நாடுகள் இதில் பங்கேற்றிருந்தாலும் முக்கிய இடத்தைப் பிடித்திருப்பது என்னவோ வடகொரியாதான் என்பது குறிப்பிடத்தக்கது.

About Unknown