உலக போதைவஸ்த்து வியாபார கேந்திர நிலையமாக மாறிவரும் இலங்கையை மீட்டெடுக்கும் நடவடிக்கைகள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் ஆலோசனைக்கமைய தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அதன் ஒரு கட்டமாக மக்கள் தொடர்பாடல் பொலிஸ் பிரிவாக இயங்கி வந்த அதிகாரிகள் குழு தற்போது முற்றிலுமாக கிராம மட்டங்களின் போதைத்தடுப்பு பிரிவாக இயங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தெரிவித்தார்.
போதையற்ற நாடு என்ற தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் கிராமத்தை கட்டியொழுப்புவோம் என்ற தொனிப்பொருளில் இன்று எம்பிலிப்பிட்டியவில் நடைபெற்ற தேசிய நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்