தேர்தல் பெறுபேறுகள் வெளியாவது தாமதித்துள்ளமை தொடர்பில் தேர்தல்கள் ஆணைக்குழு ஊடக அறிக்கை ஒன்று வெளியிடப்ட்டுள்ளது.
அந்தந்த மத்திய நிலையங்கள் மற்றும் வட்டார வாக்குகளை எண்ணும் பணி நிறைவடைந்து பெறுபேறுகள் தெரிவத்தாட்சி அதிகாரிகளிடமிருந்து தொலைநகல் மற்றும் தொலை பேசியினூடாக கிடைக்கப்பெற்றிருந்போதிலும் கையால் எடுத்து வரப்படும் பெறுபேறுகளை ஒப்பிட்டுப்பார்க்கவேண்டிய நிலை தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ளது.
இதனால் ஒரு வட்டாரத்தின் பெறுபேற்றை அறிவிக்கும் போது தபால் மூல வாக்களிப்பு பெறுபேற்றை ஒன்றிணைத்து அறிவித்துள்ள போதிலும் சில இடங்களில் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு தொலைநகல் மூலம் அவை அனுப்பப்பட்ட பெறுபேறுகளின் அறிக்கை இரண்டில் ஒன்று மாத்திரம் என்பதினால் மொத்த பெறுபேறுகளை தயாரிக்கும் பொழுது மீண்டும் மீண்டும் பரிசோதிக்க வேண்டிய நிலை தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கு ஏற்பட்டிருப்பதினால் அந்தந்த உள்ளூராட்சி மன்றங்களின் பெறுபேறுகளை அறிவிப்பதற்கு மேலும் குறிப்பிடத்தக்க நேரம் செல்லும் என்பதை தயவுடன் தெரிவித்துக்கொள்கின்றோம்.
மேலும் உள்ளூராட்சி மன்றங்கள் அனைத்து வட்டார பெறுபேறுகளை தெரிவத்தாட்சி அதிகாரியினால் தரவுக்கட்டமைப்பிற்குள் சேர்க்கும் வரையில் அந்த உள்ளூராட்சி மன்றத்தின் மொத்த பெறுபேறையும் ஊடகத்திற்கு அறிவிப்பதற்குரிய சூழ்நிலை இல்லை என்பதை தயவுடன் கவனத்தில் கொள்ளவும்.
பெறுபேறுகள் வெளியிடும் வரையில் பொறுமையாக இருக்குமாறு மிகவும் தயவுடன் கேட்டுக்கொள்கின்றோம் என்று தேர்தல் ஆணையாளர் குறித்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்