இலங்கை, இந்திய பக்தர்கள் படை சூழ இனிதே நிறைவு பெற்றது கச்­ச­தீவு புனித அந்தோனியார் திருவிழா!! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

இலங்கை, இந்திய பக்தர்கள் படை சூழ இனிதே நிறைவு பெற்றது கச்­ச­தீவு புனித அந்தோனியார் திருவிழா!!

Image result for கச்­ச­தீவு புனித அந்­தோ­னியார்இலங்கை மற்றும் இந்­திய கடல் எல்­லை­க­ளுக்­கி­டையே அமைந்­துள்ள கச்­ச­தீவு புனித அந்­தோ­னியார் ஆலய வரு­டாந்த பெரு­ விழா நேற்று மாலை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது.
 இந்நிலையில் இன்று காலை யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம் மற்றும் காலி மறை மாவட்ட ஆயர் றேமன் விக்கிரமதுங்க தலைமைத்துவத்தில் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு திருவிழா புனிதமாக முன்னெடுக்கப்பட்டு நிறைவடைந்தது.
வரலாற்றில் முதன்முறையாக சிங்கள மொழியில் ஆராதனைகள் இடம்பெற்றதோடு இந்தியாவிலிருந்து தேக்கு மரத்திலான புதிய கொடி மரம் கொண்டு வரப்பட்டு கொடியேற்றிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் 62 படகுகளில் 1,968 பேர் இந்தியாவில் இருந்தும், இலங்கையில் இருந்து 6,182 பேரும் பங்கேற்றுள்ளன
 இவர்களுக்கான குடிநீர் வசதி, தங்குமிட வசதி உள்ளிட்ட ஏனைய அனைத்து வசதிகளையும் யாழ் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானபிரகாசம் உதவியுடன், யாழ் உள்ளுராட்சி மன்றங்களின் அனுசரனையுடன் ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன் புனித அந்தோனியார் ஆலய திருவிழாவில் பங்கேற்ற இந்திய மற்றும் இலங்கை பக்தர்களுக்கான உணவு இலங்கை கடற்படையால் நேற்றிலிருந்து வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 மேலும் இங்கு வந்த பக்தர்கள் தங்களுக்குள் இனம் மதம் எல்லை வேறுப்பாடுகளை கடந்து உணவுகளையும் இனிப்புக்களையும் தங்களுக்குள் பரிமாறிக்கொண்டனர்.
கடந்த வருடம் கச்சதீவு புனித அந்தோனியார் திருவிழாவிற்கு இந்திய பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை அதனால் இவ் வருட திருவிழாவிற்கு இந்திய பக்தர்கள் மிகவும் ஆர்வத்தோடும் மகிழ்ச்சியோடும் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

About Unknown