மக்கள் மனங்களை வென்றவர் என்றும் மறையப்போவது கிடையாது : மஹிந்த - Eelatheepam Sri Lankan Breaking NEWS

மக்கள் மனங்களை வென்றவர் என்றும் மறையப்போவது கிடையாது : மஹிந்த


Image result for mahinda rajapaksaமக்களின் மனங்களை வென்றவர்கள் என்றும் மறையப்போவது கிடையாது. நல்லாட்சி அரசாங்கம் எம்மை பழிவாங்கினாலும். நாட்டு மக்கள் கைவிடவில்லையென முன்னாள்  ஜனாதிபதி மஹிந்த  ராஜபக்ஷ  தெரிவித்தார் .
   
நல்லாட்சி அரசாங்கத்தின் மீது நாட்டு மக்கள் கொண்டுள்ள பற்று தற்போது வெளிப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்ற தேர்தலின் பெறுபேறுகள் தொடர்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,
கடந்த காலங்களில் நாட்டு மக்கள் பல்வேறு தீர்க்க முடியாத பிரச்சினைகளுக்குள்ளாகி வந்தனர் . தொடர்ச்சியான பொய்யான வாக்குறுதிகளை நம்பி மக்கள் ஏமாற்றம் கண்டு வந்தனர்.
தமது வாழ்க்கையின் அடிப்படை உரிமைகளையும் பல துயரங்களையும்  அனுபவித்த மக்களின் ஆதரவின் பிரதிபலனே இந்த வெற்றி மக்களின் மனங்களை வென்றவர்கள் என்றும் மறையப்போவது கிடையாது என்ற விடயத்தினை நல்லாட்சி அரசாங்கத்திற்கு நாட்டு மக்கள் புரிய வைத்துள்ளனர்.
கிடைக்கப்பெற்ற இந்த வெற்றி பாரிய அபிவிருத்திக்கான ஒரு பாதையினை உருவாக்கி கொடுத்துள்ளது. இதனை பயன்படுத்தி  எதிர்காலத்தில் நாட்டின் அபிவிருத்தி மற்றும் அரசியலிலும் முன்னேற்றத்தினை ஏற்படுத்த பொதுமக்கள் தொடர்ந்தும் தமது ஆதரவினை வழங்க வேண்டும் என தெரிவித்தார்.

About Unknown