இன்று இறுதி தீர்ப்பு.! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

இன்று இறுதி தீர்ப்பு.!

தமி­ழகம் மற்றும் கர்­நா­டகா­வுக்கு இடை­யே­யான  காவிரி நதிநீர் பங்­கீடு பிரச்­சினை  தொடர்­பான வழக்கின்  இறுதி தீர்ப்பு இன்று வெளியா­கு­கி­றது.
தமி­ழ­கத்­துக்கும் கர்­நா­ட­கா­வுக்கும் இடை­யே­யான காவிரி நதிநீர் விவ­கா­ர­மா­னது இரு நூற்­றாண்­டு­களைக் கடந்து நீடிக்­கி­றது. உச்­ச­நீ­தி­மன்றம் இன்று அளிக்கப் போகும் தீர்ப்பு இப்­பி­ரச்­சி­னைக்கு முடிவைக் கொண்டு வருமா? என்­ப­துதான் விவ­சா­யி­களின் எதிர்­பார்ப்பு.
2007இல் வழங்­கப்­பட்ட காவிரி நடுவர் மன்­றத்தின் இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமி­ழகம், கர்­நா­டகா, கேரளா, புதுவை மாநில அர­சுகள் உச்­ச­நீ­தி­மன்­றத்தில் மேல்­மு­றை­யீடு செய்­தன. இம்­மேல்­மு­றை­யீட்டு மனு மீதான விசா­ர­ணைகள் நிறை­வ­டைந்து இன்று  இறுதித் தீர்ப்பு வழங்­கப்­ப­டலாம் என கூறப்­ப­டு­கி­றது.
கி.பி.1807ஆம் ஆண்டு அப்­போ­தைய சென்னை மாகாண அர­சுக்கும் மைசூர் அர­சுக்கும் இடையே காவிரி நதி­நீரை பகிர்ந்து கொள்­வதில் சிக்கல் ஏற்­பட பேச்­சு­வார்த்­தைகள் தொடங்­கின. ஆனால் இரண்டு நூற்­றாண்­டுகள் கடந்தும் இப்­பி­ரச்­சி­னைக்கு தீர்வு எட்­டப்­ப­ட­வில்லை. 
1986-ஆம் ஆண்டு தமி­ழக முதல்­வ­ராக இருந்த எம்.ஜி.ஆர். காவிரி நதிநீர் விவ­கா­ரத்­துக்கு தீர்வு காண நடுவர் மன்றம் ஒன்றை அமைக்க வலி­யு­றுத்தி மத்­திய அர­சுக்கு கோரிக்கை கடிதம் அனுப்­பினார்.
1990ஆம் ஆண்டு வி.பி. சிங் பிர­த­ம­ராக இருந்­த­போது காவிரி நடுவர் மன்றம் அமைக்­கப்­பட்­டது. அப்­போது மத்­திய அரசில் தி.மு.க. அங்கம் வகித்­தது.
25.6.1991இல் காவிரி நடுவர் மன்­றத்தின் இடைக்­கால ஆணை வழங்­கப்­பட்­டது. இந்த இடைக்­கால ஆணைப்­படி மேட்டூர் அணைக்கு 205 டி.எம்.சி. நீர் கிடைப்­பது உறுதி செய்­யப்­பட்­டது. மேலும் கர்­நா­டகா தமது பாச­னப்­ப­ரப்பை 11.20 லட்சம் ஏக்­க­ருக்கு மேல் விரி­வாக்கம் செய்­யவும் தடை விதிக்­கப்­பட்­டது. ஆனால் கர்­நா­டகா ஏற்­க­வில்லை. இடைக்­கால ஆணைக்கு எதி­ராக அவ­சர சட்­டத்தை கர்­நா­டகா பிறப்­பித்தது. இதைத் தொடர்ந்து தமி­ழக அரசு உச்­ச­நீ­தி­மன்­றத்தில் முறை­யிட்­டது.
10.12.1991-இல் காவிரி நடுவர் மன்­றத் தின் இடைக்­கால ஆணை மத்­திய அரசின் வர்த்தமானியில் வெளி­யி­டப்­பட்­டது. ஆனால் கர்­நா­டகா இதை ஏற்­க­வில்லை.
1997ஆம் ஆண்டு காவிரி நதிநீர் ஆணை யம் அமைக்­கப்­பட்­டது. இந்த ஆணை­யத்தின் முடி­வு­க­ளையும் கர்­நா­டகா நிரா­க­ரித்தே வந்­தது.
5.2.2007 ஆம் ஆண்டு காவிரி நடுவர் மன்­றத்தின் இறுதித் தீர்ப்பு வெளி­யி­டப்­பட்­டது. காவி­ரியின் மொத்த நீர் 740 டி.எம்.சி. என்றும் தமி­ழ­கத்­துக்கு 419 டி.எம்.சி. நீரும் கர்­நா­ட­கா­வுக்கு 270 டி.எம்.சி. நீரும் ஒதுக்­கீடு செய்து இறுதித் தீர்ப்பு வழங்­கப்­பட்­டது. அதா­வது தமி­ழ­கத்தின் உரி­மை­யான டி.எம்.சி.யில் 227 டி.எம்.சி. நீர் தமி­ழக எல்­லைக்குள் ஓடும் காவி­ரியின் கிளை நதி­க­ளான நொய்யல், பவானி, கொள்­ளிடம் ஆகி­ய­வற்­றி­லி­ருந்து காவி­ரியில் கலந்­து­விடும். எஞ்­சிய 192 டி.எம்.சி. (இடைக்­கால தீர்ப்பில் 205 டி.எம்.சி.) நீரைத் தான் கர்­நா­டகம் தமி­ழ­கத்­திற்கு தர­வேண்டும். கேர­ளா­வுக்கு 30 டி.எம்.சி. நீரும் புதுச்­சே­ரிக்கு 7 டி.எம்.சி. நீரும் வழங்­கவும் காவிரி நடுவர் மன்றம் தீர்ப்­ப­ளித்­தது.இதை எதிர்த்து தமி­ழகம், கர்­நா­டகா, கேரளா, புதுவை மாநி­லங்கள் உச்­ச­நீ­தி­மன்­றத்தில் வழக்கு தொடர்ந்­தன. இந்த வழக்­குகள் கடந்த 11 ஆண்­டு­கா­ல­மாக விசா­ரிக்­கப்­பட்டு இன்று  இறுதித் தீர்ப்பு வழங்­கப்­ப­டு­கி­றது.

About Unknown