ஹொங்கொங்கில் இன்புளூவன்சா நோய்த் தொற்றுக் காணப்படும் நிலையில் அந்நாட்டிலிருந்து பிரித்தானியாவுக்கு பயணிப்பவர்கள் மூலமாக இன்புளூவன்சா நோய்த் தொற்று பரவுவதற்கான வாய்ப்புக் காணப்படுவதாக பிரித்தானிய வைத்தியத்துறை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
எனவே பிரித்தானியாவிலுள்ள பொதுமக்களை அவதானத்துடன் இருக்குமாறும் பிரித்தானிய வைத்தியத்துறை அதிகாரிகள் அவர்கள் கூறியுள்ளனர்.
ஹொங்கொங்கில் கடந்த சில வாரங்களாகப் பரவிவரும் இன்புளூவன்சா வைரஸ் காரணமாக அந்நாட்டில் 2 சிறுவர்கள் உட்பட சுமார் 120 பேர் உயிரிழந்துள்ளதுடன் சுமார் 400 பேர் இன்புளூவன்சா நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனையடுத்து மேற்படி நோய் பரவுவதைத் தடுக்கும் வகையில் அங்குள்ள பாடசாலைகளின் ஆரம்பப் பிரிவுகள் கடந்த 8ஆம் திகதி முதல் மூடப்பட்டுள்ளன