கறுப்பு பட்டியலில் இருந்து மயிரிழையில் தப்பித்த பாகிஸ்தான்!!! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

கறுப்பு பட்டியலில் இருந்து மயிரிழையில் தப்பித்த பாகிஸ்தான்!!!

Image result for பாகிஸ்தான்பயங்கரவாத குழுக்களுக்கான நிதி ஆதாரங்கள் கண்காணிப்பு குழுவின் கறுப்பு பட்டியலில் இருந்து கடைசி நேரத்தில் பாகிஸ்தான் தப்பியுள்ளது.
 பாரிசில் நடந்த சட்ட விரோத பணப் பரிமாற்ற கண்காணிப்பு குழு கூட்டத்தில் அமெரிக்கா, இந்தியா, சீனா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் உட்பட 36 நாடுகள் கலந்து கொண்டன. உலகம் முழுவதும் உள்ள பயங்கரவாத குழுக்களுக்கான நிதி ஆதாரங்கள் எங்கிருந்து பெறப்படுகின்றன என்பதை இக்குழு கண்காணித்து வருகிறது. 
இக்கூட்டத்தில் பயங்கரவாத செயல்களை ஒடுக்க பாகிஸ்தான்  எடுத்துவரும் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பலமுறை எச்சரித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்காததால் பாகிஸ்தானை  கறுப்புப் பட்டியலில் சேர்க்க அமெரிக்கா பரிந்துரை செய்தது. 
இது குறித்து அமெரிக்க வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ராஜ் ஷா கூறியதாவது,
"பாகிஸ்தானுடனான உறவை பாதுகாக்க எல்லா முயற்சிகளையும் அமெரிக்கா மேற்கொண்டது. இந்த முடிவு எடுக்கப்பட்டதற்கு பாகிஸ்தானின்  பொறுப்பற்ற செயலே காரணம். கடந்த ஆகஸ்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த தெற்காசிய கொள்கை திட்டத்தில் பயங்கரவாதத்தை ஒடுக்க பாகிஸ்தான்  இன்னும் தீவிரமாக செயல்பட வேண்டும் என கூறி இருந்தார்.
ஆனால் பாகிஸ்தான் எடுத்த நடவடிக்கைகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் திருப்தி அடையவில்லை" எனகூறினார்.
இந்தியா, பிரிட்டன், ஜெர்மனி, பிரான்ஸ் உட்பட 35 நாடுகள் அமெரிக்காவின் பரிந்துரையை ஏற்றுக் கொண்டன. கண்காணிப்புக் குழுவில் உள்ள 36 நாடுகளில் மூன்று நாடுகள் தீர்மானத்தை ஏற்றுக்கொள்ள மறுத்தால் அத்தீர்மானத்தை நிறைவேற்ற முடியாது. 
சீனா சவுதி மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் தங்களுக்கு ஆதரவாக ஓட்டு அளிக்கும் என பாகிஸ்தான் எதிர்பார்த்தது. கடைசி நிமிடத்தில் சீனாவும் சவுதியும் பல்டி அடிக்க துருக்கி மட்டுமே பாகிஸ்தானுக்கு  ஆதரவாக வாக்களித்தது.
இருந்தும் கடைசி  நேரத்தில் பாகிஸ்தான் இந்த பட்டியலில் இருந்து தப்பி விட்டது. பயங்கரவாத நிதி அல்லது பணமோசடிக்கு எதிராக தேவையான நடவடிக்கை எடுக்க தவறிய நாடுகளின் பெயர்களின்  கறுப்பு பட்டியலில் பாகிஸ்தான் வைக்கப்படவில்லை என தகவல் வெளியாகி உள்ளது.
ஆயினும் பாரிஸை அடிப்படையாகக் கொண்ட சட்டவிரோத நிதிக்கு எதிரான உலகளாவிய தராதரங்களை கண்காணிக்கும் FATF சட்ட விரோத பணப் பரிமாற்ற கண்காணிப்பு குழு இதனை உறுதி செய்யவில்லை.
முன்னதாக  பல்வேறு ஊடகங்கள் பாகிஸ்தான்  கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டு  இருப்பதாக கூறி இருந்தன.  ஆனால் அந்த பட்டியலில்  கடைசி நேரத்தில் பாகிஸ்தான் தப்பி விட்டது. 

About Unknown