பிரான்ஸ் தலைநகர் பாரீசில் உலக அதிசயங்களுள் ஒன்றான ஈபிள் கோபுரம் உள்ளது. இதை பார்வையிட ஆண்டுதோறும் 60 லட்சம் சுற்றுலா பயணிகள் இங்கு வருகை தருகின்றன.
இந்தநிலையில் பாரீஸ் நகரின் அடையாளமாக திகழும் ஈபிள் கோபுரம் கடந்த 6-ந்தேதி முதல் மூடப்பட்டது. நாளை (11-ந்தேதி) வரை இது மூடப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரீஸ் நகரில் தற்போது கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 1887-ம் ஆண்டில் இருந்து எப்போதும் இல்லாத அளவுக்கு 12 செ.மீட்டர் உயரத்துக்கு பனி கொட்டிக்கிடக்கிறது.
இதனால் ஈபிள் கோபுரத்தை பார்வையிட வருகை தரும் சுற்றுலா பயணிகள் வழுக்கி விழும் அபாய நிலை உருவாகும். எனவே ஈபிள் கோபுரம் மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
கடும் பனிப்பொழிவு காரணமாக பாரீஸ் நகர விதிகளில் கனரக சரக்கு வாகனங்கள் செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.