முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று மீண்டும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன போர் நடைபெற்ற காலப் பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளால் தங்கம், வெடிப் பொருட்கள், ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் பகுதியிலேயே இந்த அகழ்வுப் பணிகள் இடம்பெற்றது. முல்லைத்தீவு நீதவான் லெனின் குமார் முன்னிலையில் இந்த பணிகள் இடம்பெற்றன. எனினும் எவ்வித பொருட்களும் இந்த அகழ்வின் போது கண்டு பிடிக்கப்படவில்லை - Eelatheepam Sri Lankan Breaking NEWS

முல்லைத்தீவு முள்ளியவளை பகுதியில் நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று மீண்டும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன போர் நடைபெற்ற காலப் பகுதியில் தமிழீழ விடுதலை புலிகளால் தங்கம், வெடிப் பொருட்கள், ஆயுதங்கள் புதைக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் பகுதியிலேயே இந்த அகழ்வுப் பணிகள் இடம்பெற்றது. முல்லைத்தீவு நீதவான் லெனின் குமார் முன்னிலையில் இந்த பணிகள் இடம்பெற்றன. எனினும் எவ்வித பொருட்களும் இந்த அகழ்வின் போது கண்டு பிடிக்கப்படவில்லை

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் காரணமாக அனைத்து பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 9 ஆம் திகதி விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
இதனைத் தவிர, வாக்குப்பெட்டிகள் மற்றும் ஆவணங்களை விநியோகிக்கும் மற்றும் பொறுப்பேற்கும் பணிகளுக்காக பயன்படுத்தப்படவுள்ள 19 பாடசாலைகளும் 2 கல்வியற்கல்லூரிகளும் எதிர்வரும் 7 ஆம், 8 ஆம் மற்றும் 9 ஆம் திகதிகளில் மூடப்படவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மூடப்படவுள்ள பாடசாலைகள் மற்றும் கல்வியற்கல்லூரிகள் இம்மாதம் 12 ஆம் திகதி மீளத் திறக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 10 ஆம் திகதி நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About Unknown