யாழ்ப்பாணம் – ஆவரங்கால் பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன், தெற்கின் நிலவரம் தொடர்பில் கருத்துத் தெரிவித்தார்.
இதன்போது, தெற்கின் குழப்ப நிலையில் பிற நாட்டு அரசாங்கங்களின் தலையீடுகள் இருப்பதாக சி.வி. விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.
அந்நாடுகளின் தலைவர்கள் தற்போதுள்ள அரசாங்கம் பிளவுபட விட மாட்டார்கள் எனவும் தெரிவித்தார்.
மேலும், தற்போதுள்ள அரசாங்கம் தொடர்ந்து இரண்டு வருடங்களுக்கு இருக்கும் என தாம் நம்புவதாகவும் வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.