மெக்சிகோவில் 7.2 ரிச்ட்டர் நிலநடுக்கமொன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
மெக்சிகோ சிட்டிக்கு அருகில் அந்நாட்டு நேரப்படி மாலை 5.39 மணிக்கு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆராய்ச்சி மையம் குறிப்பிட்டுள்ளது.
கவுதமாலா நாட்டின் தெற்கு பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக கூறப்படுகின்றது.
2017 செப்டம்பர் மாதம் மெக்சிகோவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தினால் 369 பேர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.