அதன்படி, களுத்துறையில் 70%, காலியில் 75%, மாத்தறையில் 70%, அனுராதபுரத்தில் 75%, மாத்தளையில் 80%, கேகாலையில் 70%, அம்பாறையில் 70%, மொனராகலையில் 75%, பதுளையில் 65% மற்றும் ஹம்பாந்தோட்டையில் 70% என வாக்குகள் பதிவாகியிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் 62%, கண்டியில் 65%, பொலனறுவையில் 70%, நுவர எலியவில் 70% மற்றும் குருணாகலையில் 78% வாக்குகள் பதிவாகியுள்ளன.
இதன்படி, நாடளாவிய ரீதியில் சுமார் அறுபது சதவீதத்துக்கு மேலான வாக்குப் பதிவு இடம்பெற்றிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.