மலைதீவின் முன்னாள் ஜனாதிபதி மஹ்மூத் அப்துல் கையூம் மற்றும் அந்நாட்டின் பிரதம நீதியரசர் அப்துல்லா சயீட் ஆகியோர் கைதுசெய்யப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் அவசரகாலநிலையை பிரகடனப்படுத்தியுள்ளார்.
தனது பதவி எப்போது வேண்டுமானாலும் பறிபோகலாம் என்ற நிலை உள்ளதால், அந்நாட்டு ஜனாதிபதி அப்துல்லா யாமீன் எதிர்வரும் 15 நாட்களுக்கு அவசரகாலநிலையை பிரகடனம் செய்துள்ளார்.மாலைதீவின் முன்னாளல் ஜனாதிபதி மஹ்மூத் அப்துல் கையூமின் வீட்டை நேற்றிரவு சுற்றிவளைத்த மாலைதீவு பொலிஸார் அவரை கைதுசெய்துள்ளதுடன் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை அந்நாட்டின் பிரதம நீதியரசர் அப்துல்லா சயீட்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மாலைதீவின் முன்னாளல் ஜனாதிபதி மஹ்மூத் அப்துல் கையூமின் வீட்டை நேற்றிரவு சுற்றிவளைத்த மாலைதீவு பொலிஸார் அவரை கைதுசெய்துள்ளதுடன் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை அந்நாட்டின் பிரதம நீதியரசர் அப்துல்லா சயீட்டும் கைதுசெய்யப்பட்டுள்ளார்.மாலைதீவில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள எதிர்க்கட்சித்தலைவர்களை விடுவிக்க வேண்டும் எனவும் 12 எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களை பதவிநீக்கியது தவறானதெனவும் அந்நாட்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதுஇந்நிலையில் நீதிமன்ற உத்தரவின்பிரகாரம் 12 பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் பதவியை மீண்டும் வழங்கினால் தற்போதைய ஜனாதிபதியின் பதவி பறிபோகும் சூழல் உள்ளது.
இதனால், அவர் நீதிமன்ற உத்தரவை ஏற்க மறுத்து விட்டதுடன் பாராளுமன்றம் கூடுவதும் ஒத்தி வைக்கப்பட்டது. அத்துடன் அரச அலுவலகங்கள் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டது.
அரசாங்கம் நீதிபதிகளின் உத்தரவை ஏற்கக் கூடாது என அதிகாரிகளுக்கு அரசு அறிவுறுத்தியதையடுத்து ஐ.நா சபையும், சர்வதேச நாடுகளும் தலையிட வேண்டும் எனக் கோரியும் ஜனாதிபதி யாமீன் பதவி விலக வேண்டும் எனக் கோரியும் எதிர்க்கட்சியினர் நாடு தழுவிய ரீதியில் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
முகப்பு / உலகச் செய்திகள்
/ மாலைதீவில் அரசியல் குழப்பம் ; முன்னாள் ஜனாதிபதி கைது : அவசரகால நிலை பிரகடனம்