இத்தாலியில் புகலிட கோரிக்கையாளர்கள் தாக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சுமார் 1000 இற்கும் மேற்பட்டோர் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
இத்தாலியின் வலதுசாரி கட்சியை சேர்ந்த ஒருவரால் கடந்த வாரம் ஒருவர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானதுடன், மேலும் 6 பேர் காயமடைந்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
இத்தாலியில் அடுத்த மாதம் 04 ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், புகலிட கோரிக்கையாளர்கள் தொடர்பிலான பிரச்சினை முக்கிய இடத்தை வகிக்குமெனவும் சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.