ரணில் பிர­த­ம­ராக நீடிக்­க­ வேண்டும் : ஐ.தே.க. பாராளுமன்றக்குழு தீர்மானம் - Eelatheepam Sri Lankan Breaking NEWS

ரணில் பிர­த­ம­ராக நீடிக்­க­ வேண்டும் : ஐ.தே.க. பாராளுமன்றக்குழு தீர்மானம்

Image result for ரணில் விக்­கி­ர­ம­சிங்கரணில் விக்­கி­ர­ம­சிங்க  தொடர்ந்து பிர­த­ம­ராக பதவி வகிக்க வேண்டும் என்றும் ஐக்­கிய தேசி­யக் கட்­சியில் துரி­த­மாக மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும் என்றும் ஜனா­தி­பதி, பிர­தமர் தலை­மையில் தேசிய அர­சாங்­கத்தை தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் எனவும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் நேற்று அலரி மாளி­கையில் கூடிய ஐக்­கிய தேசி­யக்­கட்சி பாரா­ளு­மன்ற குழு கூட்­டத்தின் போது ஏக­ம­ன­தாக தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது.
    
அத்­துடன் இந்த பேச்­சு­வார்த்­தையின் போது மாற்­றங்கள் செய்­யப்­ப­ட­வுள்ள புதிய அமைச்­சர்கள்  குறித்தும் கலந்­து­ரை­யா­டல்கள் செய்­யப்­பட்­டுள்­ளன. மேலும் புதிய தேர்தல் முறைமை தொடர்­பாக விரி­வாக ஆரா­யவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.
தேசிய அர­சாங்­கத்­திற்குள் ஏற்­பட்­டுள்ள முரண்­பா­டான நிலைமை தொடர்­பாக நேற்­றைய தினமும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் விசேட ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற குழு கூட்டம் நடை­பெற்­றன. இந்த கூட்­டத்­திற்கு ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் தலை­வர்­களும் கலந்து கொண்­டனர். இந்த கூட்டம் நேற்று பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மையில் காலை 9.30 மணிக்கு அல­ரி­மா­ளி­கையில் ஆரம்­ப­மா­னது. இந்த கூட்­டத்­திற்கு ஐக்­கிய தேசியக் கட்­சியின் அமைச்­சர்கள் மற்றும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் பலரும் கலந்து கொண்­டனர். 
இந்த கூட்­டத்தின் போது தேசிய அர­சாங்­கத்தை தொடர்ந்து கொண்டு செல்­வது தொடர்பில் விரி­வாக ஆரா­யப்­பட்­டுள்­ளது. அத்­துடன் தேசிய அர­சாங்­கத்தில் காணப்­படும் குறைப்­பாடு நிவர்த்தி செய்­வது குறித்து ஆராய்ந்த போது அமைச்­ச­ரவை மாற்­றங்கள் தொடர்பில் அதிக அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது. சுதந்­திரக் கட்­சியில் இருந்து சுயா­தீ­ன­மாக செல்ல சிலர் முயற்­சிப்­ப­தனை அடுத்து ஏனை­யோரை தேசிய அர­சாங்­கத்தில் இணைத்து கொண்டு பய­ணிப்­பது குறித்து அதிக அவ­தானம் செலுத்­தப்­பட்­டுள்­ளது.
மேலும் தேசிய அர­சாங்­கத்தின் எதிர்­கால நகர்வு தொடர்பில் நேற்று முன் தினம் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வுடன் ஐக்­கிய தேசியக் கட்­சியின் சிரேஷ்ட தலை­வர்கள் முன்­னெ­டுத்த பேச்­சு­வார்த்­தையின் சராம்சம் பாரா­ளு­மன்ற குழு கூட்­டத்தில் முன்­வைக்­கப்­பட்­டது. ஜனா­தி­ப­தி­யு­ட­னான சந்­திப்பில்  ஐக்­கிய தேசியக் கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­களும் அமைச்­சர்­க­ளு­மான சஜித் பிரே­ம­தாஸ, கபீர் ஹாஷிம், மலிக் சம­ர­விக்­கி­ரம, ராஜித சேனா­ரத்ன ஆகியோர் கலந்து கொண்­டுள்­ளனர்.   பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவும்   பங்­கு­பற்­றி­யுள்ளார். இந்த சந்­திப்பின் போது ரணில் விக்­கி­ர­ம­சிங்க பிர­த­ம­ராக தொடர்ந்து இருக்க வேண்டும் என்றும் தேசிய அர­சாங்கம் தொடர்ந்து பய­ணிக்கும் என்றும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது. இந்த யோச­னைக்கு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­வும இணங்­கி­யுள்ளார். இதன்­படி ஜனா­தி­ப­தியின் இணக்­கத்தை  பாரா­ளு­மன்ற குழு கூட்­டத்தில் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க முன்­வைத்தார்.
அத்­துடன் கால­தா­மதம் இ்ன்றி ஐக்­கிய தேசியக் கட்­சியில் மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­களை துரி­தப்­ப­டுத்த வேண்டும் என வலி­யு­றுத்­தப்­பட்­டது. இதன்­போது புதி­ய­வர்­க­ளுக்கு கட்­சியின் பிர­தான பொறுப்­பு­களை வழங்க பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க இணக்கம் தெரி­வித்­துள்ளார். 
அத்­துடன் ஆட்­சியை ஸ்திர­மாக்­கி­யதன் பின்னர் கட்சி மறு­சீ­ர­மைப்பு செய்­வ­தற்கு தீர்­மா­னிக்­கப்­பட்­டது. இதன்­படி ரணில் விக்­கி­ர­ம­சிங்க தொடர்ந்து பிர­த­ம­ராக பதவி வகிக்க வேண்டும் என்றும் ஐக்­கிய தேசி­யக்க கட்­சியில் துரி­த­மாக மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்க வேண்டும் என்றும் ஜனா­தி­பதி, பிர­தமர் தலை­மையில் தேசிய அர­சாங்­கத்தை தொடர்ந்து கொண்டு செல்ல வேண்டும் என நேற்­றைய கூட்­டத்தின் போது ஏக­ம­ன­தாக தீர்­மானம் எடுக்­கப்­பட்­டது.
பாரா­ளு­மன்ற குழு கூட்டம் நிறை­வ­டைந்த பின்னர் ஐக்­கிய தேசியக் கட்­சியின் சிரேஷ்ட உறுப்­பி­னர்­களும் அமைச்­சர்­களும் ஊட­க­ங­க­ளுக்கு கருத்து தெரி­வித்­தனர்.
கபீர் ஹாஷிம்
இதன்­போது ஐக்­கிய தேசியக் கட்­சியின் பொதுச்­செ­ய­லா­ளரும் அமைச்­ச­ரு­மான கபீர் ஹாஷிம் கருத்து தெரி­விக்­கையில்,
ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன மற்றும் பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தலை­மையில் தேசிய அர­சாங்கம் தொடர்ந்து பய­ணிக்கும். மக்கள் எமக்கு வழங்­கிய ஆணையை நாம் தொடர்ந்து கொண்டு செல்வோம். இதன்­போது அர­சாங்­கத்தை முதலில் ஸ்திர­மான நிலை­மைக்கு கொண்டு வந்து அதன்­பின்னர் ஐக்­கிய தேசியக் கட்­சியில் பிர­தான மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுக்­க­வுள்ளோம். இந்த மறு­சீ­ர­மைப்பு நட­வ­டிக்­கை­களை துரி­த­மாக முன்­னெ­டுக்க வேண்டும் என ஏக­ம­ன­தாக தீர்­மா­னிக்­கப்­பட்­டது. ஆகவே துரி­த­மாக நட­வ­டிக்­கை­களை நாம் முன்­னெ­டுப்போம். தற்­போது அர­சாங்­கத்­திற்கே பெரும்­பான்மை பலம் உள்­ளது. வேறு யாருக்கும் பெரும்­பான்மை பலம் கிடை­யாது. மேலும் சுதந்­திரக் கட்­சி­யினர் தனித்து ஆட்சி அமைக்க நட­வ­டிக்கை எடுத்தால் அதன் பின்னர் நாம் கூடி எமது பலத்தை நாம் நிரூ­பிப்போம். இதன்­போது உறு­தி­யான தீர்­வினை நாம் எடுப்போம். 
தனித்து ஆட்சி அமைப்­ப­தாக பலர் தமது தனி கருத்­து­களை கூறலாம். ஆனால் தேசிய அர­சாங்­கத்தை தொடர்ந்து முன்­னெ­டுத்து செல்­வதே எமது நோக்­க­மாகும் .இதன்­படி புதிய வழி­களின் பிர­காரம் பய­ணிப்போம் என்றார்.
வஜிர அபே­வர்­தன
இதன்­போது உள்­நாட்டு அலு­வல்கள் அமைச்சர் வஜிர அபே­வர்­தன கருத்து வெளி­யி­டு­கையில்,
தேசிய அர­சாங்­கத்தை கொண்டு செல்­வது தொடர்பில் தீர்­மானம் எடுக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை. அர­சி­ய­லை­மைப்பில் மிகவும் தெளி­வாக கூறப்­பட்­டுள்­ளது. அர­சி­ய­ல­மைப்பின் பிர­கா­ரமே தீர­மானம் எடுப்போம். ஊட­கங்கள் முதலில் அர­சி­ய­ல­மைப்பின் 19 ஆவது திருத்­தச்­சட்­டத்தை தெரிந்­தி­ருந்தால் எந்த பிரச்­சி­னையும் இல்லை. பழைய அர­சி­ய­ல­மைப்­பினை முன்­வைத்தே சுதந்­திரக் கட்­சி­யினர் தனித்து ஆட்சி அமைக்க முயல்­கின்­றனர். அதனை விடுத்து தற்­போ­தைய அர­சி­ய­ல­மைப்பில் பிர­த­மரை நீக்­கவோ அல்­லது ஆட்­சியை கவிழ்க்­கவோ தற்­போ­தைக்கு முடி­யாது.
தற்­போது எமது அர­சாங்கம் தான் உள்­ளது. ஆகவே மறு­ப­டியும் எதற்கு எமது அர­சாங்­கத்தை உரு­வாக்க வேண்டும் என்றார்.
கயந்த கரு­ணா­தி­லக
இதன்­போது அமைச்சர் கயந்த கரு­ணா­தி­லக கருத்து வெளி­யி­டு­கையில்,
இந்த கூட்­டத்தில் தேசிய அர­சாங்­கத்தை முன்­கொண்டு செல்­வது தொடர்பில் ஆரா­யப்­பட்­டது. நாம் எமது கருத்­து­களை முன்­வைத்தோம். இதன்­போது ஐக்­கிய தேசியக் கட்­சி­யிலும் தேசிய அர­சாங்­கத்­திலும் மாற்­றங்கள் ஏற்­பட வேண்டும் என கோரினோம். இதன்­போது மக்கள் உணரும் வகை­யி­லான மாற்­றங்­களை செய்­ய­வுள்ளோம். பிர­தமர் பத­வியில் எந்த மாற்­றமும் ஏற்­ப­டாது. ஒன்­றாக பய­ணிப்­பது தொடர்­பி­லேயே பேச்­சு­வார்த்தை நடத்­தினோம் என்றார்.  
அசோக அபே­சிங்க
இதன்­போது இரா­ஜாங்க அமைச்சர் அசோக அபே­சிங்க கருத்து வெளி­யி­டு­கையில்,
தேசிய அர­சாங்­கத்தை தொடர்ந்து கொண்டு செல்வோம். ஆகவே யாரும் அஞ்ச வேண்­டி­ய­தில்லை. சுதந்­திரக் கட்­சி­யினர் சிலர் வில­க­வுள்­ள­தாக தெரி­ய­வ­ரு­கின்­றது. அது எமக்கு பிரச்­சி­னை­யில்லை. சம்­பந்­தப்­பட்ட அமைச்­சர்கள் எவ­ரா­வது வில­கினால் அவர்­க­ளது வெற்­றி­டத்­திற்கு வேறொ­ரு­வரை நிய­மித்து எமது பய­ணத்தை தொடர்வோம். அமைச்­ச­ர­வை­யிலும் மாற்­றங்கள் ஏற்­படும். தேசிய அர­சாங்கம் தொடர்ந்து பய­ணிக்கும் என ஜனா­தி­பதி இன்று நாட்­டுக்கு அறி­விப்பார் என்றார்.
காவிந்து ஜய­வர்­தன
இதன்­போது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் காவிந்து ஜய­வர்­தன கருத்து வெளி­யி­டு­கையில்,
முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்ஷ பெரும் அச்­சத்தில் உள்ளார். அடுத்த இரு வரு­டத்தில் சிறைக்கு செல்ல வேண்­டிய நிலைமை ஏற்­பட்­டுள்­ளதால் அதன் கார­ண­மாக ஆட்­சியை கவிழ்க்க முனை­கின்றார். தேசிய அர­சாங்­கத்தை தொடர்ந்து கொண்டு செல்ல ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அனு­மதி வழங்­கி­யுள்ளார். இதற்­கான அனு­ம­தியை கட்சி தலை­வர்­க­ளுக்கு அறி­வு­றுத்­தி­யுள்ளார். 
தனி ஆட்­சியை உரு­வாக்க வேண்டும் என்றே நாம் நினைத்தோம். எனினும் நல்­லாட்சி நீடிக்க வேண்டும் என கட்­சி­யினால் தீர்­மா­னிக்­கப்­பட்­டுள்­ளது என்றார்.
நளின் பண்­டார 
இங்கு குரு­நாகல் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நளின் பண்­டார கருத்து தெரி­விக்­கையில்,
பல­மான அர­சாங்­கத்தை அமைக்க இணக்­கத்­திற்கு வந்­துள்ளோம். ஆகவே அர­சாங்­கத்தின் வியூகம் எப்­ப­டி­யா­னது என்­பது தொடர்பில் தெளி­வில்லை. ஜனா­தி­ப­தியின் கெள­ர­வத்தை பாது­காத்து தொடர்ந்து ஆட்­சியை கொண்டு செல்வோம். அண்­மையில் நடந்த தேர்­தலில் உள்­ளூ­ராட்சி மன்ற ஆட்­சிக்கே மக்கள் ஆணை வழங்­கி­யுள்­ளனர். இதன்­படி இன்னும் இரண்டு மாதத்தில் ஆணை வழங்­கிய மக்கள் தாம் செய்த தவ­று­களை புரிந்­துக்­கொள்வர். எதிர்­வரும் காலங்­களில் கட்­சியில் பாரிய மாற்­றங்கள் செய்ய வேண்டும் என பிர­தமர் உட்­பட அனை­வரும் ஏற்­றுக்­கொண்­டனர். இதன்­படி முதலில் ஆட்­சியை ஸ்திர­மான நிலை­மைக்கு கொண்டு வந்த பின்னர் கட்­சியில் மாற்­றங்­களை செய்­ய­வுள்ளோம். 
மக்கள் உணரும் வகை­யி­லான ஆட்சியை நாம் உருவாக்கவுள்ளோம். தனி ஆட்சியை   உருவாக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாகும். இதன்படி பாரிய மாற்றங்களை அரசாங்கத்திற்குள் நாம் செய்வோம். ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சியை ஒத்த சாயலை புதிய அமைச்சரவையில் நிரூபிப்போம்.  அமைச்சரவை உட்பட பல துறைகளில் மாற்றங்கள் ஏற்படும். சமுர்த்தி உட்பட அனைத்து துறையும் மாற்றம் காணும். இதற்காக குழுவும் அமைக்கப்பட்டது. ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ள வியுகங்கள் மாறியே ஆட்சியே வரபோகின்றது. தேர்தல் முறைமை தொடர்பாக கலந்துரையாட தீர்மானம் எடுக்கப்பட்டது.
முன்னைய ஆட்சியின் போது அலரி மாளிகையில் மதுபானம் மற்றும் தானம் வழங்கப்பட்டது. எனினும் தற்போது அப்படி இல்லை. நாம் மதுபானம் அருந்துகின்றோம். எனினும் தகுந்த இடத்தில் அதனை செய்வோம். அலரிமாளிகையில் அதனை செய்ய மாட்டோம். பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கூட அலரி மாளிகையில் உண்ணுவதோ பருகுவதோ கிடையாது என்றார்.

About Unknown