சிறுமி ஹாசினி கொலை வழக்கில் இன்று தீர்ப்பு: குற்றவாளிக்கு கடுமையான தண்டனை கிடைக்க வாய்ப்பு - Eelatheepam Sri Lankan Breaking NEWS

சிறுமி ஹாசினி கொலை வழக்கில் இன்று தீர்ப்பு: குற்றவாளிக்கு கடுமையான தண்டனை கிடைக்க வாய்ப்பு

Related imageபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள சிறுமி ஹாசினி கொலை வழக்கில் செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்க உள்ளது. தஷ்வந்த்துக்கு கடுமையான தண்டனை வழங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. தீர்ப்பு வழங்கப்படுவதை ஒட்டி செங்கல்பட்டு நீதிமன்ற வளாகத்தில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை குன்றத்தூர் பகுதியை சேர்ந்த ஹாசினி என்னும் சிறுமி கடந்தாண்டு பிப்.6-ம் தேதி பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் தஷ்வந்த் என்பவர் கைது செய்யப்பட்டார். 

பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் தனது தாய் சரளாவை கொலை செய்துவிட்டு நகைகளுடன் தலைமறைவானார். தனிப்படை அமைத்த தமிழக போலீசார் அவரை தீவிரமாக தேடி வந்தது. பின் மும்பையில் தஷ்வந்த் கைது செய்யப்பட்டார். விமான நிலையம் அழைத்துச் செல்லும் வழியில் போலீசாரை தாக்கி தஷ்வந்த் தப்பினார். பின் 24 மணி நேரத்தில் மும்பை போலீஸ் உதவியுடன் சென்னை போலீசார் அவரை கைது செய்தனர். 
பின் சென்னை கொண்டுவரப்பட்டு புழல் சிறையில் அவர் அடைக்கப்பட்டார். இந்நிலையில் சிறுமி ஹாசினி கொலை வழக்கில் 35 சாட்சியங்களின் விசாரணை முடிந்து இன்று செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் இன்று காலை 10 மணி அளவில் தீர்ப்பு வழங்க உள்ளது.  காலை 9 மணி அளவில் தஷ்வந்த் புழல் சிறையில் இருந்து அழைத்து வரப்பட உள்ளார். குற்றவாளி தஷ்வந்த்துக்கு கடுமையான தீர்ப்பு வழங்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About Unknown