மாணவர்களிடம் பணம் அற­வி­டப்­பட்டால் கடும் நட­வ­டிக்கை.! - Eelatheepam Sri Lankan Breaking NEWS

மாணவர்களிடம் பணம் அற­வி­டப்­பட்டால் கடும் நட­வ­டிக்கை.!

கல்வி அமைச்சின் மூல­மாக பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு இல­வ­ச­மாக வழங்­கப்­ப­டு­கின்ற சுரக் ஷா காப்­பு­றுதி திட்­டத்­திற்கு மாண­வர்­களை பதிவு செய்­கின்ற பொழுது ஒரு சில பாட­சா­லை­களில் ஆசி­ரி­யர்கள் பணம் அற­வி­டு­வ­தாக எனக்கு பெற்­றோர்­களால் புகார் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது. அவ்வாறு பணம் அற­வி­டு­வது சட்­டப்­படி குற்­ற­மாகும். அவ்­வாறு பணம் கேட்­கின்ற ஆசி­ரி­யர்கள், அதி­பர்கள் தொடர்­பாக எனது அமைச்சின் கவ­னத்­திற்கு கொண்டு வந்தால் உரிய நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­மென கல்வி இரா­ஜாங்க அமைச்சர் வேலு­சாமி இரா­தா­கி­ருஷ்ணன் தெரி­வித்­துள்ளார்.
இது தொடர்­பாக கல்வி அமைச்சர் நேற்று முன்­தினம் ஊட­கங்­க­ளுக்கு விடுத்­துள்ள அறிக்­கையில், 
கல்வி அமைச்சு பாட­சாலை மாண­வர்­களின் நன்மை கருதி இல­வச காப்­பு­றுதி திட்டம் ஒன்றை தற்­பொ­ழுது அறி­முகம் செய்­துள்­ளது.இந்த காப்­பு­றுதி திட்­ட­மா­னது சுரக் ஷா என்னும் திட்­டத்தின் மூல­மாக நடை­மு­றை­ப்ப­டுத்­தப்­பட்டு வரு­கின்­றது. இந்த காப்­பு­றுதி திட்­டத்தின் மூல­மாக மாண­வர்­க­ளுக்கு இரண்டு இலட்சம் ரூபா வரை காப்­பு­று­தி­களை பெற்றுக் கொள்ள முடியும். அதற்­காக அனைத்து மாண­வர்­களும் தங்­களை தங்­க­ளு­டைய பாட­சா­லை­களில் பதிவு செய்து கொள்ள வேண்டும். அதற்­காக எந்த ஒரு கட்­ட­ணத்­தையும் பாட­சா­லையில் அதி­பர்­களோ ஆசி­ரி­யர்­களோ அற­விட முடி­யாது. இல­வ­ச­மாக பதிவு செய்து கொள்­வதன் மூலம் இந்த திட்­டத்தில் மாண­வர்­களை இணைத்துக் கொள்ள முடியும்.
மாண­வர்­க­ளுக்கு ஏற்­ப­டு­கின்ற சுக­வீனம், விபத்­துகள் மற்றும் ஏனைய மருத்­துவம் தொடர்­பான பிரச்­சி­னை­களின் பொழுது அவர்கள் இந்த திட்­டத்தின் மூல­மாக பயன்­களை பெற்றுக் கொள்ள முடியும். இதன்மூலம் பெற்­றோர்­க­ளுக்கு ஏற்­படும் பாரிய சுமையை அர­சாங்கம் ஏற்றுக் கொண்­டுள்­ளது.மாண­வர்கள் தங்­க­ளு­டைய 13 வருட கல்­வியை தொடர வேண்டும் என்­ப­தற்­கா­கவே இந்த திட்­டத்­தினை அர­சாங்கம் நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கின்­றது. இதன்மூல­மாக பெற்றோர் பலன்­களை பெற்றுக் கொள்ள வேண்டும்.
 இந்த திட்­ட­மா­னது முழு­மை­யாக இல­வ­ச­மா­கவே வழங்­கப்­ப­டு­கின்­றது. இதற்­காக பாட­சா­லை­களில் எந்த காரணம் கொண்டும் பணம் அறவிட முடியாது. அப்படி பாடசாலைகளில் பணம் அறவிடப்பட்டால் அது தொடர்பாக என்னுடைய கவனத்திற்கு கொண்டு வரும் சந்தர்ப்பத்தில் குறித்த அதிபர்கள், ஆசிரியர்க ளுக்கு எதிராக உரிய நடவடிக்கை  எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

About Unknown