தென்கொரிய முன்னாள் ஜனாதிபதியின் தோழிக்கு 20 ஆண்டுகள் சிறை - Eelatheepam Sri Lankan Breaking NEWS

தென்கொரிய முன்னாள் ஜனாதிபதியின் தோழிக்கு 20 ஆண்டுகள் சிறை

Image result for சோய் சூன் சில்தென்கொரியாவில் ஜனாதிபதியாக இருந்த பார்க் கியூனின் நெருங்கிய தோழியான சோய் சூன் சில் அரசு விவகாரங்களில் தலையீடு செய்துவருவதாகவும், அரசின் மிக முக்கிய ரகசிய கோப்புகளை ஆய்வு செய்து வருவதாகவும் குற்றச்சாட்டுகள் கிளம்பின.
மேலும், ஜனாதிபதியுடன் தனக்கு இருக்கும் நெருக்கத்தை பயன்படுத்தி, பல நிறுவனங்களிடம் இருந்தும் நன்கொடைகளை பெற்று, இவர் ஆதாயம் அடைந்து வருவதாகவும் அந்நாட்டின் எதிர்க்கட்சிகள் ஆதாரங்களுடன் குற்றம்சுமத்தின.
அதையடுத்து, கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் தேதி சோய் சூன் சில் கைது செய்யப்பட்டார். மேலும், பாராளுமன்றத்தில் பார்க் கியூன் ஹே-வுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டு மார்ச் 10-ம் தேதி அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.
இதன் பின்னர் நடைபெற்ற அதிபர் தேர்தலில் லிபரல் கட்சியின் மூன் ஜே-இன் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றினார்.
ஊழல் குற்றச்சாட்டால் பதவியை இழந்த தென்கொரியா முன்னாள் அதிபர் பார்க் கியூன் மீதான விசாரணை அந்நாட்டு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. தான் எந்த தவறும் செய்யவில்லை என பார்க் விசாரணையின் போது கூறிவந்தார்.
சியால் மாவட்ட நீதிமன்றத்தில் சோய் சூன் சில் மீது குற்ற விசாரணை நடந்து வந்த நிலையில், தன் மீதான குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார். இந்நிலையில், அவருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இன்று தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மேலும், 16.6 மில்லியன் அமெரிக்க டாலர் அபராதமும் சோய்க்கு விதிக்கப்பட்டுள்ளது.

About Unknown